விஜய் – K.S.ரவிக்குமார் கூட்டணியில் அமைந்த படம் ஏன் தோற்றது?

90 களில் விஜய் நடித்த படங்கள் அன்றைய இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தன. அவர் இளைய தளபதியாக வளர்ந்து கொண்டிருந்த காலம். தன் அப்பாவின் இயக்கத்தில் நடிப்பதில் இருந்து விலகி, லவ் டுடே, பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற ரொமாண்டிக், லவ் சப்ஜெக்ட் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் விஜய்யை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்களும், முன்ணி இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். விஜய்யின் ஸ்மார்ட், கியூட் சிரிப்பு, டேன்ஸ், இளைஞர்களைக் கவரும் டிரெஸ்ஸிங் சென்ஸ் இதெல்லாம் அவரை முன்னணி ஹீரோவாக்கியது.

K.S.ரவிக்குமார் – விஜய் கூட்டணியில் முதல் படமே ஏன் இப்படி?

அப்போது முத்து உள்ளிட்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக அறியப்பட்ட கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த படம் மின்சார கண்ணா. இதில் குஷ்பூ, ரம்பா, மோனிகா கேஸ்டிலினோ ஆகியோர் நடித்திருந்தனர். K.R.G மூவிஸ் இண்டர் நேசனல் தயாரித்திருந்தது.

கே.எஸ்.ரவிக்குமார் முதன் முதலாக விஜயுடன் இணைவதால் அப்போது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. காமெடி, காதல் கலந்த கதையில் உருவானது. ஆண்களையே வெறுக்கு அக்காவுடன் இருக்கும் ஹீரோயினுக்கான பணக்கார ரான விஜய் டிரைவராக வேலை செய்வார். அவர் மிகப்பெரிய பணக்கார் என்பது பின்னால் தெரிய வரும்.

இப்படத்தில் இடம்பெற்ற ஊதா ஊதா, உன் பேர் சொல்ல ஆசைதான் போன்ற பாடல்கள், தேவாவின் இசையில் இன்றும் இளைஞர்களின் ஃபேவரெட். ஆனால் இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கே.எஸ்.ரவிக்குமார், இப்படத்தின் ஹீரோயின் சாய்ஸ் சரியில்லாததாலும், ரசிகர்களுக்கு அவர் பரீட்சயம் இல்லாததும் தான் படம் அப்படி விமர்சனங்கள் பெற்றது என்று தெரிவித்துள்ளார்.

ஒருவேளை அன்றைய ஃபேவரெட் நடிகைகளை இப்படத்தில் நடிக்க வைத்திருந்தால் படம் ஓடியிருக்கலாம் என கூறப்படுகிறது. இப்போதும் விஜய் – ரம்பாவின் நடனத்துக்காகவும், தேவாவின் இசைக்காகவும் இப்படத்தைப் பார்போரும் உள்ளனர்.

Leave a Comment