தமிழில் வெளியாகி தேசிய விருது வாங்கிய 5 படங்களை பற்றி பார்ப்போம்.
கன்னத்தில் முத்தமிட்டால்: மாதவன் மற்றும் கீர்த்தன நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை மணிரத்தினம் இயக்கியிருந்தார். பேச முடியாத ஒரு குழந்தையின் தாக்கத்தை இப்படத்தில் அழகாக எடுத்துக் காட்டி இருப்பார் இயக்குனர், இந்தப்படமும் தேசிய விருது வாங்கியது.
மகாநதி: கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் மகாநதி. இப்படத்தில் கமல்ஹாசன் வேலைக்காரனாக நடித்திருப்பார். அதுமட்டுமில்லாமல் கிராமத்தில் நடக்கும் சண்டைகள் மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் போன்றவற்றை அழகாக எடுத்துக் காட்டி இருப்பார் இயக்குனர்.
கமல்ஹாசனின் மகள் கடத்தப்பட்டு பாலியல் தொழில் செய்பவர்களிடம் சிக்கிக் கொள்கிறார். பாம்பே சென்று அவரை மீட்பது தான் இந்த படத்தின் முழு கதை.
மௌன ராகம்: மௌன ராகம் படத்திற்கு இன்றும் பல ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக மோகன், ரேவதி மற்றும் கார்த்தி நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது. எல்லா நேரமும் காதலை எடுத்துக்காட்டு படமாக விளங்கியது.
அதுமட்டுமில்லாமல் திருமணத்திற்குப் பிறகு இவரது வாழ்க்கையில் நடக்கும் கதை மிக அழகாக எடுத்துக் காட்டி இருப்பார் இயக்குனர். பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணத்தையும் அழகான முறையில் எடுத்துக் காட்டி இருப்பார். இப்படம் எல்லா விருதுகள் வாங்கியது மட்டுமில்லாமல் தேசிய விருது வாங்கியது.
முதல் மரியாதை: சிவாஜி நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் முதல் மரியாதை. இப்படத்தில் சிவாஜி நடிப்பை புகழாத நடிகர்கள் மற்றும் ரசிகர்களே இருக்க முடியாது. அந்தளவிற்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார் சிவாஜி.
இப்படம் தைரியமாக ஒரு மனிதன் வாழ்வை பற்றி எடுக்கப்பட்டிருக்கும் அதுமட்டுமில்லாமல் திருமணத்திற்கு முன்பு வருவது காதலாகவும் திருமணத்திற்கு பின்பு வருவது நட்பாகும் சிறப்பாக எடுத்துக் காட்டி இருப்பார் இயக்குனர். இப்படம் தேசிய விருது வாங்கியது.
பசங்க: சிறுகுழந்தைகள் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பசங்க. இப்படத்தின் கதையை மிகச் சிறப்பாக வடிவமைத்து இருப்பார் இயக்குனர். குழந்தைகளுக்குள் நடக்கும் சண்டையை மையமாக வைத்தே கதையை வடிவமைத்திருந்தனர்.
அதுமட்டுமில்லாமல் குழந்தைகள் வாழ்க்கையை சித்தரிக்கும் படமாகவும் இப்படம் விளங்கியது. இறுதியில் சண்டை போட்ட குழந்தைகள் அனைவரும் நண்பர்களாக மாறுவதே இப்படத்தின்கதை. இப்படமும் தேசிய விருது வாங்கியது.