Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ரஜினி, கமலுக்காக காத்திருக்கும் இயக்குனர்.. கதையெல்லாம் ரெடியாம்

தற்போது உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி, கமல் இருவரும் ஆரம்பத்தில் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தற்போது வரை கிடைக்கவில்லை. மேலும் இவர்கள் இருவரும் தனியாக தன் […]

தற்போது உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி, கமல் இருவரும் ஆரம்பத்தில் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தற்போது வரை கிடைக்கவில்லை. மேலும் இவர்கள் இருவரும் தனியாக தன் பட வேலைகளில் பிஸியாக உள்ளனர்.

கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். ரஜினியும் அண்ணாத்த படத்திற்குப் பிறகு நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கான முதற்கட்ட வேலைகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் மலையாளத்தில் வெளியான நேரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். நிவின் பாலி மற்றும் நஸ்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன்பிறகு 2015இல் இவர் இயக்கிய படம்தான் பிரேமம்.

இப்படம் மலையாள ரசிகர்களை தாண்டி தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல லாபத்தை பெற்றது. இந்நிலையில் தனக்கு இருக்கும் ஆசையை அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார். அதாவது நான் கமல் சார் அல்லது ரஜினி சார் யாரையாவது சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்காக நான் உருவாகியிருக்கும் கதையை நிச்சயமாக கூறுவேன்.

இந்த கதை அவர்களுக்கு கண்டிப்பாக பிடித்துப் போக வாய்ப்புள்ளது. ஆனால் எனக்கு அதிர்ஷ்டம் இல்லாதது போல் தோன்றுகிறது. ஏனென்றால் இதுவரைக்கும் ரஜினி, கமல் இருவரையும் என் வாழ்நாளில் ஒருமுறைகூட நேரில் சந்தித்ததில்லை.

ஒருவேளை எனக்கு அதிர்ஷ்டம் இருந்த எதிர்காலத்தில் ரஜினி சார் மற்றும் கமல் சாரை சந்திக்க நேரிட்டால் அவர்களிடம் என் கதையை கூறுவேன். அவர்களுக்கு அது பிடித்திருந்தால் கண்டிப்பாக என் முழு திறமையும் போட்டு நல்ல ஒரு பொழுதுபோக்கான படமாக எடுப்பேன் என அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.

Alphonse Puthren
Alphonse Puthren
A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.