ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ரசிகர்களின் எதிர்பார்ப்பை தாண்டி மிரளவிட்ட ஐந்து படங்கள்.. 2ம் பாகத்திற்காக ஏங்க வைத்த இயக்குனர்கள்

தற்போது தமிழ் சினிமாவில் உருவாகும் சில படங்கள் இரண்டாம் பாகத்தை உறுதி செய்துவிட்டு தான் முதல் பாகத்தை எடுக்கிறார்கள். ஆனால் தமிழில் சில படங்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் பல வருடங்களுக்கு காத்திருக்கின்றனர். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்தப் படங்களின் படப்பிடிப்பு பாதி முடிந்தும் அல்லது தொடங்காமலும் உள்ளது. அவ்வாறு உள்ள 5 படங்களை பார்க்கலாம்.

இந்தியன் : ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் ஷங்கர் இறங்கியிருந்தார். கிட்டத்தட்ட 70 சதவிகித படப்பிடிப்பு முடிந்துள்ளது. முதலில் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதைதொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்துடன், ஷங்கருக்கு பிரச்சனை ஏற்பட்டது. அதன்பிறகு எல்லாம் சுமூகமாக முடிந்த நிலையில் விக்ரம் படத்தில் கமலஹாசன் பிஸியாக இருந்தார். இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

பாபநாசம் : கமலஹாசன், கௌதமி மற்றும் பலர் நடிப்பில் வெளியான பாபநாசம் படம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றிருந்தது. மேலும் கமலின் அந்த சுயம்புலிங்கம் கதாபாத்திரம் பலரையும் கவர்ந்தது. இந்நிலையில் தெலுங்கில் த்ரிஷ்யம் 2 வெளியான நிலையில் பாபநாசம் 2 படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் தற்போத கமலஹாசன், கௌதமி இடையே கருத்துவேறுபாடு காரணமாக கௌதமி கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இப்படம் எப்போது உருவாகும் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கைதி : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் கைதி. சென்டிமெண்ட், திரில்லர், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கலவையாக இப்படம் இருந்தது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் கமலின் விக்ரம் படத்தை முடித்த கையோடு கைதி 2 படத்திற்கான கதையை எழுத உள்ளார்.

வடசென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதால் இரண்டாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்திருந்தனர். அதற்குள் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் அசுரன் படம் வெளியாகி இருந்தது. ஆனால் வடச்சென்னை படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும். அதற்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை என வெற்றிமாறன் கூறியுள்ளார்.

ஆயிரத்தில் ஒருவன் : செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் தனுசை வைத்து இயக்க உள்ளதாக அறிவித்திருந்தார். தற்போது செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் நானே வருவேன் படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் படத்தின் படப்பிடிப்பு 2024 இல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News