புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சாய்பல்லவியை வைத்து குழப்பிய சிவகார்த்திகேயன்.. அப்போ அம்மணி அதுல ஹீரோயின் இல்லையா?

சிவகார்த்திகேயன் டான் படத்தை அடுத்து ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப்படத்தில் ஹீரோயினாக வெளிநாட்டில் இருந்து ஒரு நடிகை வர விருப்பதாகவும், அவருக்கு விசா பிராப்ளமகா இருப்பதாகவும், அவர் வந்த பின் முழுவதுமாக ஷூட்டிங் ஆரம்பித்து விடும் என்று கூறி வருகின்றனர்.

அந்த தெலுங்கு படம் இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் எனவும், ஒருவர் வெளிநாட்டு ஹீரோயினும், அடுத்த ஹீரோயினாக சாய் பல்லவி நடிப்பதாக பேச்சுக்கள் அடிபட்டது. இந்நிலையில் அது சிங்கிள் ஹீரோயின் சப்ஜெக்ட் தான் என்று இப்பொழுது தெரியவந்துள்ளது.

இந்த தெலுங்கு படத்திற்கு அடுத்து சிவகார்த்திகேயன், கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படமும் கூடிய விரைவில் ஆரம்பிக்கவிருக்கிறது. இப்படி தொடர்ந்து பிசியாக இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் கடந்த வாரம் கமல்ஹாசன் தன் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டிருந்தார்.

Rajkama
Rajkama

கமல் தயாரிக்கும் படத்தில் தான் சாய்பல்லவி, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். அதற்காகத்தான் அவர் தற்போது கால்ஷீட் கொடுத்துள்ளார். அந்த தெலுங்கு படத்தில் சாய்பல்லவி நடிக்கவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending News