ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சினிமா வாழ்க்கையையே புரட்டிப் போட்ட 6 படங்கள்.. அடையாளத்தைக் கொடுத்த புரட்சிகரமான பெயர்கள்

முன்னணி நடிகர்களாக உள்ள சிலருக்கு பட்டம் கொடுக்கப்பட்ட அந்தப் பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள். அவ்வாறு சூப்பர் ஸ்டார், தல, தளபதி, உலகநாயகன் பல நடிகர்களுக்கும் பட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நடிகர்களின் படங்கள் வெளியானால் அவர்களின் ஹேர் டேக்குகளை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்கிறார்கள். அவ்வாறு நடிகர்களுக்குப் பட்டங்கள் பெற காரணமாக இருந்த படங்களை பார்க்கலாம்.

ரஜினிகாந்த் : பல பிளாக்பஸ்டர் ஹிட்களைக் கொடுத்து அதிக ரசிகர்களை கைவசம் வைத்துள்ளார் ரஜினிகாந்த். இவரை ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் மற்றும் தலைவர் என்று அழைக்கின்றனர். ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா நடிப்பில் 1978 ஆம் ஆண்டு வெளியான பைரவி படத்திற்குப் பிறகுதான் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

கமலஹாசன் : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவர் தான் கமலஹாசன். இவரை ரசிகர்கள் ஆண்டவர் அல்லது உலகநாயகன் என்று அழைக்கின்றனர். கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தெனாலி. இப்படத்தின் போது கமலஹாசனுக்கு உலகநாயகன் என்ற பட்டத்தை வைத்தார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

விஜயகாந்த் : சினிமாவில் தப்போது விஜயகாந்தின் பங்களிப்பு இல்லாத போதும் தனக்கான ரசிகர்களை தக்க வைத்துள்ளார் விஜயகாந்த். ஆர்கே செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கேப்டன் பிரபாகரன். இப்படத்திற்கு பிறகு விஜயகாந்த் கேப்டன் என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

அஜித் : தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் மாஸ் ஹீரோவாக நடித்திருந்த படம் தீனா. இப்படத்தின் மூலம் அஜித்துக்கு தல என்ற பட்டம் கிடைத்தது. ஆனால் அஜித் சமீபத்தில் தன்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

விஜய் : கோலிவுட்டில் மிக முக்கியமான நடிகர்களுள் ஒருவர் தான் நடிகர் விஜய். இவர் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். ஆரம்பத்தில் இவரது ரசிகர்கள் இளையதளபதி என அழைத்தனர். அதன்பிறகு, மெர்சல் படத்தின் ரிலீசுக்கு பின்பு விஜய்யை தளபதி என அவரது ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர்.

சிம்பு : குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிம்பு. இவர் தொடர் தோல்விகளுக்குப் பிறகு மாநாடு படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். இவரை ரசிகர்கள் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைத்தனர். ஆனால் வாலு படம் வெளியான பிறகு சிம்பு, லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பயன்படுத்த விரும்பவில்லை.

Trending News