Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

நம்ப வைத்து கமலை மோசம் செய்த மணிரத்தினம்.. தக்கலைஃப் முதல் நாள் வசூல்

நம்ப வைத்து கமலை மோசம் செய்த மணிரத்தினம்.. தக்கலைஃப் முதல் நாள் வசூல்

கமலஹாசன் மணிரத்தினம் மீண்டும் 36 வருடங்கள் கழித்து இணைந்த படம். இதுதான் இந்த படத்திற்கு பாதகமாய் அமைந்துள்ளது. இந்த எதிர்பார்ப்பை மொத்தமாய் பூர்த்தி செய்யாமல் கோட்டை விட்டுள்ளார் மணிரத்தினம். இதுவே கமலை தவிர வேறு யாராவது ஒரு ஹீரோ […]

கமலஹாசன் மணிரத்தினம் மீண்டும் 36 வருடங்கள் கழித்து இணைந்த படம். இதுதான் இந்த படத்திற்கு பாதகமாய் அமைந்துள்ளது. இந்த எதிர்பார்ப்பை மொத்தமாய் பூர்த்தி செய்யாமல் கோட்டை விட்டுள்ளார் மணிரத்தினம். இதுவே கமலை தவிர வேறு யாராவது ஒரு ஹீரோ இதில் நடித்திருந்தால் ஓரளவு சமாளித்திருக்கலாம் .

இதற்கு முன்னால் இவர்கள் சேர்ந்து மிரட்டிய நாயகன் படத்தில் 10 தவீதம் கூட இந்த படம் இல்லை என்பதுதான் மொத்த ஏமாற்றத்திற்கு காரணமாய் அமைந்தது. மற்றொரு விஷயம் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கொடுத்த பூஸ்ட் தான். கமல் நாயகன் படத்தைவிட இது பல மடங்கு சூப்பர் என தெரிவித்து வந்தார்.

இந்த படத்தின் கதையே சரி இல்லை என்பதும் அனைவரது குற்றச்சாட்டு. கமலுக்கு ஏற்ற கதாபாத்திரம் இது இல்லை. லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் எடுத்த விக்ரம் போன்ற கேரக்டர் தான் அவருக்கு செட் ஆகும். காதல் கலந்த ரொமான்ஸ் கதையில் கமலை வைத்து பார்ப்பதற்கு ரசிகர்கள் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.

கமலின் வளர்ப்பு மகனான சிம்பு, கமலுடன் காதல் உறவில் இருக்கும் த்ரிஷாவை களவாடுவது போன்ற கதாபாத்திரத்தை வைத்து மணிரத்தினம் இந்த படத்தில் கோட்டை விட்டுவிட்டார். சிம்புவிற்கு இந்த மாதிரி ஒரு கதாபாத்திரம் தேவை இல்லை ஆனால் மணிரத்தினம் படம் என்பதாலேயே சமாதானமாகியுள்ளார் என்பது தெரிகிறது,

மேலும் இந்த படத்தை பார்ப்பதற்கு செக்கச் சிவந்த வானம் பார்ட் 2 போல தெரிகிறது, அரவிந்த்சாமி மற்றும் சிம்பு நடித்த அதே கேரக்டர்கள் தான் ஞாபகம் வருகிறது கமலையும், சிம்புவையும் பார்க்கையில். முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் 18 கோடிகள் வசூலித்துள்ளது.

T

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.