திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

முதலும் கடைசியுமாக சொந்த குரலில் ரஜினி பாடிய ஒரே பாடல்.. இளையராஜாவும், கங்கை அமரனும் போட்ட பெரும் சண்டை

கமல், சிம்பு, விஜய் போன்றவர்கள் இப்பொழுது தங்களது சொந்த குரலில் படங்களில் பாடலைப் பாடி அசத்துகின்றனர். ஆனால் சூப்பர் ஸ்டார் இதுவரை படத்தில் பாடியது கிடையாது. அவர் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் தமிழ் படத்தில் பாடியுள்ளார். இன்று வரை மக்கள் மத்தியில் அந்த பாட்டு ஒரு நீங்காத இடம் பெற்றுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு ஸ்டைலாக பேச வரும், ஆனால் பாட வராது. இவரை எப்படியாவது பாட வைத்து விட வேண்டும் என்று பல இசையமைப்பாளர்கள் தங்களது ஆசையை கூறியுள்ளனர். ஆனால் அது நடக்கவே இல்லை. ஒருமுறை இளையராஜாவிற்காக மட்டுமே சூப்பர் ஸ்டார் பாடியுள்ளார். 

Also Read : மேடையிலேயே பிரபல இயக்குனரை அவமதித்த இளையராஜா.. ஆணவத்தின் உச்சிக்கு சென்ற சம்பவம்

இளையராஜா இசையமைத்த மன்னன் படத்தில் ரஜினியை பாடவைத்து விடவேண்டும் என்று ஒரு பாடலையும் பாட வைத்தார்கள். ரஜினி, விஜய் சாந்தியுடன் “அடிக்குது குளிரு” என்ற பாடலை தமிழ் சினிமாவில் முதன் முதலாக தன் சொந்த குரலில் பாடி அசத்தினார்.

இதற்கு கிட்டத்தட்ட பத்து பதினைந்து டேக் எடுத்து விட்டாராம். ஒருவழியாக இதுதான் பெர்ஃபெக்ட் என்று இளையராஜா அவர் பாடியதில் பெஸ்ட் எதுவோ அதை தேர்ந்தெடுத்து விட்டார். ஆனால் கங்கை அமரன் வந்து ரஜினி பாடியது எதுவுமே சரியில்லை திரும்ப பாட வையுங்கள், என்று இளையராஜாவிடம் சண்டை பிடித்திருக்கிறார்.

Also Read : டாப் இயக்குனராக வந்திருக்க வேண்டிய பிரபலம்.. இளையராஜாவால் பறிபோன 13 பட வாய்ப்புகள்

இளையராஜா தன் தம்பியிடம் நாங்கள் எவ்வளவோ ட்ரை பண்ணி பார்த்து விட்டோம், இருந்ததில் இதுதான் பெஸ்ட் என்று கூறியிருக்கிறார். யார் சொல்லியும் கேட்காத கங்கை அமரன், ரஜினியை திரும்ப பாடவைத்தாராம். ஆனால் அதுவும் சரியாக அமையவில்லை.கடைசியில் ஏற்கனவே தேர்ந்தெடுத்ததை தான்படத்தில் சேர்த்துள்ளார்கள்.

தலையில் அடித்துக்கொண்டு கங்கை அமரனை திட்டி தீர்த்து விட்டார் இளையராஜா. இவ்வளவு பொறுமையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பத்து, பதினைந்து முறை பொறுமையாக பாடி தன்னுடைய உயர்ந்த பண்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Also Read : இளையராஜாவை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள்.. வாய்ப்புகள் பறிபோனாலும் வீம்பாய் நின்ற இசைஞானி

Trending News