திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

நடிகர்கள், இயக்குனர்களாக அவதரித்த 5 பிரபலங்கள்.. வல்லவனாக மாறிய சிம்பு

பொதுவாகவே ஹீரோக்கள் நடிப்பில் மட்டும் அதிகமாக கவனத்தை செலுத்தி நடிகராக மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று முழு முயற்சியுடன் அதில் மட்டும் கவனம் செலுத்துவார்கள். ஆனால் சில நடிகர்கள் நடிப்பிலும் சாதித்து சில படங்களை இயக்கியும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நடிகர்கள், படங்களை இயக்கி உள்ளதை பற்றி பார்க்கலாம்.

அர்ஜுன்: இவர் ஒரு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார்.  முதலில் சிம்ஹதா மாரி சைன்யா என்ற கன்னட படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்பு நன்றி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வந்தார். 1992 ஆம் ஆண்டு சேவகன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்பு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஜென்டில்மேன் திரைப்படத்தில் நடித்து விமர்சன ரீதியாக அதிக அளவில் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து பல படங்களை நடித்து இயக்கியும் வந்தார். மேலும் இவர் இயக்கத்தில் சேவகன் படத்தை தொடர்ந்து பிரதாப், ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி, ஏழுமலை, சுயவரம் போன்ற 12 படங்களை இயக்கியுள்ளார்.

Also read: யாரும் வராததால் பல கோடிகளை வாரி இறைக்கும் தயாரிப்பாளர்.. வாழ்நாளில் அதிக சம்பளம் வாங்கிய அர்ஜுன்.!

கமலஹாசன் : இவர் குழந்தை நட்சத்திரமாக திரை உலகிற்கு அறிமுகமாகி பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக இப்பொழுது நம் அனைவரும் மனதிலும் உலக நாயகனாக முத்திரை பதித்திருக்கிறார். இவர் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும், பின்னணி பாடகர் ஆகவும் மற்றும் இயக்குனராகவும் பல பரிமாணங்களில் வெற்றி பெற்று வருகிறார்.

அப்படிப்பட்ட இவர் சில படங்களை இயக்கி இயக்குனராக அவதரித்திருக்கிறார். இவர் 1997 ஆம் ஆண்டு இயக்கிய முதல் படம் சாச்சி 420 ஹிந்தியில் வெளியிடப்பட்டது. இது தமிழில் வெளியான அவ்வை சண்முகி படத்தின் ரீமேக் படமாகும். இதனை அடுத்து ஹேராம், விஸ்வரூபம், விருமாண்டி, மருதநாயகம் போன்ற படங்களை இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார்.

சிம்பு : இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சிறு வேடங்களில் நடித்து சினிமா வாழ்க்கை தொடங்கினார். பின்பு இவரின் தந்தை இயக்கத்தில் காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து டாப் ஹீரோவாக வலம் வருகிறார். அத்துடன் இவர் படங்களையும் இயக்க ஆரம்பித்தார். அப்படி இவர் இயக்கிய படம் தான் மன்மதன் மற்றும் வல்லவன். இந்த இரண்டு படங்களும் இவரே இயக்கி மற்றும் நடித்தும் வெற்றி பெற்றார்.

Also read: லியோ படத்தில் கண்டிப்பாக கமலஹாசன்.. சர்ப்ரைஸாக கொடுக்க இயக்குனர் போட்ட பிளான்.!

தனுஷ்: இவருடைய தந்தை இயக்கத்தில் வெளிவந்த துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். இவர் நடிக்க வந்த போது இவருக்கு ஏற்பட்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி தொடர்ந்து படங்களில் நடித்து இப்போது மாஸ் ஹீரோவாக நம் மனதில் இடம் பிடித்திருக்கிறார். அத்துடன் சில படங்களையும் இயக்கி வருகிறார். அப்படி இவர் இயக்கிய படங்கள் பா பாண்டி, வேலையில்லா பட்டதாரி 2. இந்த இரண்டு படங்களும் அவருக்கு வெற்றியை கொடுத்திருக்கிறது.

சரத்குமார்: இவர் முதலில் தெலுங்கு படத்தில் நடித்து சினிமாவிற்குள் நுழைந்தார். பின்னர் வில்லன் மற்றும் துணை வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். அத்துடன் பல படங்களில் நடிகராக அறிமுகம் ஆகி மக்கள் மனதில் ஒரு நாயகனாக நிரூபித்தார். இவர் 130 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சில படங்களில் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். பின்பு 2006 ஆம் ஆண்டு தலைமகன் என்ற படத்தை முதன் முதலில் இயக்கி அதில் இவரை நடித்தார். இந்த படம் சரத்குமாரின் 100 வது படமாகும்.

Also read: தனுஷ் எவ்வளவோ சொல்லியும் கேட்காத செல்வராகவன்.. கடைசியில் அவமானப்பட்டது தான் மிச்சம்

- Advertisement -spot_img

Trending News