வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வெற்றி படத்தினால் ஒரேடியாக சம்பளத்தை ஏற்றிய 5 நடிகர்கள்.. உச்சாணி கொம்புக்கு போன SJ சூர்யா

பொதுவாகவே நடிகர்களுக்கு ஒரு சில படங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துவிட்டது என்றால் அவர்கள் அடுத்த படத்திற்கு சம்பளத்தை அதிகம் கேட்டு டிமாண்ட் பண்ணுவார்கள். இது வழக்கமாக சினிமா துறையில் நடந்து வருகின்ற ஒரு விஷயம். அதுபோலவே ஒரே படத்தின் வெற்றியை வைத்து ஒரேடியாக சம்பளத்தை அதிகமாக கேட்டு வரும் ஐந்து நடிகர்கள். இதில் அதிக அளவில் உச்சாணிக் கொம்புக்கு போன எஸ் ஜே சூர்யா.

தனுஷ்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் வெளியாகி வந்த படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தில் தனுஷ்,நித்யா மேனன்,ராசி கண்ணா,மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு முன்னாடி தொடர்ச்சியாக இவரது படங்கள் தோல்வி அடைந்து வந்தது. ஆனால் இந்தப் படத்தில் இவருக்கு ஒரு பெரிய அளவில் வெற்றி கொடுத்தது மட்டுமல்லாமல் அதிகளவில் வசூலையும் பெற்று கொடுத்தது. இந்தப் படம் பாக்ஸ்ஆபீசில் 110 கோடிக்கும் மேல் வசூல் கிடைத்தது. உலக அளவில் தனுஷின் அதிக வருவாய் ஈட்டும் படமாக இது அமைந்தது.

Also read: களத்தில் இறங்கிய கொக்கி குமார்.. செல்வராகவனின் தந்திரத்தில் மாட்டிக் கொண்ட தனுஷ்

கமல்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் நல்ல வரவேற்ப்பை பெற்றுத் தந்த படம் விக்ரம். சமீப காலமாக கமலுக்கு வெற்றி சொல்லும் அளவிற்கு எந்த படங்களும் அமையவில்லை. அதை முறியடிக்கும் வகையில் இந்த படத்தில் மாபெரும் வெற்றியை பார்த்து வந்தார். இது தமிழ் சினிமாவில் வெளியான அனைத்துப் படங்களின் வசூல் சாதனைகளையும் முறியடித்தது. இது ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து. இந்த வெற்றிப் படத்தை தொடர்ந்து கமல் அடுத்த படங்களில் இவருக்கான சம்பளத்தை அதிகமாக கேட்டிருக்கிறார்.

சிம்பு: வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாநாடு. இது ஒரு புது விதமான மாறுபட்ட கதைகளைக் கொண்ட திரைப்படமாக அமைந்தது. இந்தப் படம் ரசிகர்களுக்கு இடையே மிகப்பெரிய ஆதரவோடு அமோக வெற்றி கிடைத்தது. தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த சிம்புக்கு இந்த படம் வெற்றியை கொடுத்து ஒரு திருப்புமுனையாக இவரை சினிமாவில் தூக்கிவிட்டது. இப்பொழுது இவர் அடுத்த படத்திற்காக தயாரிப்பாளர்களிடம் சம்பளத்தை உயர்த்தி கேட்டிருக்கிறார்.

Also readமீண்டும் மருதநாயகத்தை கையில் எடுக்கும் கமல்.. ஹீரோவாக நடிக்க இருக்கும் மாஸ் நடிகர்

ஜெயம் ரவி: மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு வரலாற்று மிக்க பிரம்மாண்டமான படமாக வெளிவந்த பொன்னியின் செல்வன். இந்தப் படத்தில் அருள் மொழி வர்மன் கேரக்டரில் நடித்த ஜெயம் ரவி தான் பொன்னின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருந்தது. இந்த படத்தின் மூலம் ஜெயம் ரவிக்கு ரசிகர்களிடையே ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தில் நடிச்சதன் மூலம் அடுத்த படங்களில் இவர்கான சம்பளத்தை அதிகமாக்கி இருக்கிறார்.

எஸ் ஜே சூர்யா: வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மாநாடு. இதில் சிம்பு,எஸ் ஜே சூர்யா,கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பிரேம்ஜி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தனர். இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. அதிலும் முக்கியமாக இந்த படத்தில் ‘வந்தா சுட்டா போனா ரிப்பீட்டு’ என்ற வசனத்தின் மூலம் எஸ் ஜே சூர்யா எல்லாரையும் கவர்ந்தார். இதில் இவரின் எதார்த்தமான நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இந்தப் படத்திற்குப் பிறகு இவரை தேடி இயக்குனர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள். இதனால் பெரிய அளவில் உச்சாணி கொம்புக்கு சென்ற இவர் தயாரிப்பாளர்களிடம் அதிக அளவில் சம்பளத்தை கேட்டு வருகிறார்.

Also read: எஸ் ஜே சூர்யாவை அடையாளப்படுத்திய 2 படங்கள்.. இன்று வரை பேசப்படும் கதாபாத்திரங்கள்

Trending News