வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பாக்யராஜ் சாயலில் நடித்த 4 நடிகர்கள்.. டைமிங் காமெடியில் பட்டைய கிளப்பும் சிவகார்த்திகேயன்

பாக்கியராஜ் படங்கள் பொதுவாகவே கருத்துள்ளதாகவும், காமெடிக்கு பஞ்சமே இல்லாத அளவுக்கு தான் இருக்கும்.  மேலும் இவரின் படம் எப்பொழுதுமே பார்த்து ரசிக்கும் வகையில் தான் அமையும். அந்த வகையில் சில நடிகர்களின் படங்களும் இவரது சாயலிலே அமைந்திருக்கும்.

சிவகார்த்திகேயன்: பாண்டியராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த மெரினா திரைப்படம். இது சிவகார்த்திகேயனின் முதல் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தில் ஓவியாவுடன் இணைந்து நடித்திருப்பார். இதில் சிவகார்த்திகேயன் நடிப்பு கிட்டத்தட்ட பாக்கியராஜ் நடித்தது போன்றே இருக்கும்.

Also read: காதுல பூ சுத்துன கமல், சிவகார்த்திகேயன்.. உங்க உருட்டுக்கு ஒரு அளவே இல்லையா.!

பொதுவாக பாக்கியராஜ் படம் என்றாலே அவர் வெகுலியாகத் தான் நடிப்பார்.
அதே மாதிரி இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிப்பை பார்த்தவர்கள் பாக்கியராஜ் போன்றே இருக்கிறது என்று விமர்சித்தனர். மேலும் அதே சாயலில் இவருடைய டைமிங் காமெடியும் பட்டைய கிளப்பியது.

பருத்திவீரன் கார்த்தி: அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் கார்த்தி, பிரியாமணி, சரவணன் மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் நடித்தனர். இதில் கார்த்தி நடிப்பை பார்த்த பலரும் இவரிடம் பாக்யராஜ் போல ஒரு அசட்டுத்தனமான நடிப்பு இருக்கிறது என்று சொல்லும் விதமாக நடித்திருப்பார். அது மட்டுமில்லாமல் ஆரம்பத்தில் இருந்து இவர் நடித்த படங்கள் எல்லாமே பாக்யராஜ் நடிப்பை போல பிரதிபலித்தது என்றே சொல்லலாம்.

Also read: கார்த்திக் இல்லாமல் உருவாகும் பையா-2.. பிரம்மாண்டமாக எடுக்க ஆசைப்படும் லிங்குசாமி கூட்டணி

பிரகாஷ்ராஜ் : 2005 ஆம் ஆண்டு வெளிவந்த சிவகாசி படத்தில் விஜய், அசின் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்தனர். இதில் பிரகாஷ்ராஜ் உடையப்பா என்னும் கதாபாத்திரத்தில் காமெடி கலந்த வில்லனாக நடித்திருப்பார். இதில் பிரகாஷ்ராஜ் ஒவ்வொரு காட்சியிலும் பாக்கியராஜை ஞாபகப்படுத்தும் அளவிற்கு வெகுளித்தனமாக நடித்திருப்பார்.

விமல்: 2010 ஆம் ஆண்டு வெளிவந்த களவாணி நகைச்சுவை திரைப்படம் ஆகும்.
இதில் விமல், ஓவியா, கஞ்சா கருப்பு, மற்றும் இளவரசு ஆகியோர் நடித்தனர். இந்தப் படத்தில் விமல் மதுபான கடையில் இருந்து காமெடி செய்வது பாக்யராஜ் போலவே பண்ணியிருப்பார். அதாவது ருத்ரா படத்தில் பாக்யராஜ் பேங்கில் காமெடி செய்வது போல, மதுபான கடையில் விமல் அடிக்கும் லூட்டி அப்படியே பாக்யராஜை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது.

Also read: குடி போதைக்கு அடிமையான களவாணி நடிகர்.. தொடர்ந்து பறிபோகும் சினிமா வாய்ப்பு

 

Trending News