வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ரஜினி கைப்பிடித்து தூக்கிவிட்ட 4 இளம் இயக்குனர்கள்.. இப்ப அவங்க ரேஞ்சே வேற

ஒரு காலத்தில் இளம் இயக்குனர்கள் யாரும் பெரிய ஹீரோக்கள் பக்கம் நெருங்கக் கூட முடியாது. அவர்களுக்கு பெரிய ஹீரோக்களை இயக்குவது என்பது எட்டாத கனியாக தான் இருந்தது. சில முக்கிய இயக்குனர்கள் மட்டுமே உச்ச நடிகர்களின் திரைப்படங்களை இயக்குவார்கள்.

அப்படி ஒரு கருத்தை உடைத்து காட்டியவர் ரஜினி. சமீப காலமாக இவர் பல இளம் இயக்குனர்களுடன் கைக்கோர்த்து வருகிறார். அந்த வரிசையில் ரஜினி வாய்ப்பளித்த இயக்குனர்களை பற்றி காண்போம்.

கார்த்திக் சுப்புராஜ் தற்போது பிரபல இயக்குனராக இருக்கும் இவர் ஆரம்பத்தில் ஒரு ஐடி கம்பெனியில் பணி புரிந்தவர். சினிமா துறையின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக இவர் ஒரு தொலைக்காட்சியில் நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.

அதைத் தொடர்ந்து அவர் பீசா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அவர் ஒரு சில திரைப்படங்களை இயக்கி வந்தார். அந்த சமயத்தில் தான் அவருக்கு ரஜினிகாந்த் தன்னுடைய பேட்டை திரைப்படத்தின் மூலம் வாய்ப்பு கொடுத்தார். அதன்பிறகு அவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

நெல்சன் திலீப்குமார் விஜய் டிவி நிகழ்ச்சிகளை இயக்கி கொண்டிருந்த இவர் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் இயக்கிய டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

தற்போது இவரின் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியாக இருக்கிறது. தற்போது அவருக்கு ரஜினிகாந்த் தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார். படங்களை இயக்க வந்த இவ்வளவு குறுகிய காலத்திலேயே சூப்பர் ஸ்டாரை இயக்கும் அளவுக்கு அவர் வளர்ந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பா ரஞ்சித் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் ரஞ்சித். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது.

இந்தத் திறமையை பார்த்து ரஜினிகாந்த் தன்னுடைய கபாலி திரைப்படத்தின் மூலம் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். அதில் ரஞ்சித், ரஜினியை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்டியிருப்பார். அதில் மிகவும் இம்ப்ரஸ் ஆன ரஜினி தன்னுடைய அடுத்த படமான காலா திரைப்படத்திலும் ரஞ்சித்துக்கு வாய்ப்பு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

அருண்ராஜா காமராஜ் புரட்சிகரமான பாடல்களை எழுதுவதில் திறமையான இவர் ஜிகர்தண்டா படத்தில் சேது கதாபாத்திரத்தில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு டிங் டாங் என்ற பாடலை எழுதியதன் மூலம் புகழ் பெற்றார். அதுமட்டுமின்றி மரகத நாணயம், கபாலி, காலா போன்ற படங்களிலும் அவர் நிறைய பாடல்களை எழுதியுள்ளார்.

அதில் ரஜினிக்காக இவர் எழுதிய நெருப்புடா பாடல் மற்றும் விஜய்க்காக பைரவா திரைப்படத்தில் வரலாம் வரலாம் வா என்ற பாடல் மிகவும் பிரபலமானது. கபாலி திரைப்படத்தில் அவருடைய திறமையை பார்த்து வியந்த சூப்பர் ஸ்டார் அவருக்கு தன்னுடைய அடுத்தடுத்த திரைப்படங்களில் வாய்ப்பு கொடுத்தார். மேலும் அருண்ராஜா ஒரு பாடலாசிரியர், நடிகர் என்பதையும் தாண்டி ஒரு இயக்குனராகவும் இருக்கிறார்.

Trending News