திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கௌதம் மேனனுக்கு பைக், சிம்புக்கு என்ன தெரியுமா?. வாரி வழங்கும் ஐசரி கணேஷ்

மாநாடு வெற்றியைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் வெந்து தணிந்தது காடு படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களை தொடர்ந்து கௌதம் மேனன், சிம்பு கூட்டணி ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமானின் இசை மேலும் வலு சேர்த்தது. இந்நிலையில் படம் வெளியாகி பத்து நாட்களே ஆன நிலையில் 60 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதை கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பட குழுவுக்கு பரிசுகளை வாரி வழங்கி வருகிறார்.

Also Read :சிம்பு அகராதியிலேயே முடியாது என நடிக்க மறுத்த காட்சி.. ஷாக்கில் இருந்து மீளாத கௌதம் மேனன்

முதலாவதாக இப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனனுக்கு சுமார் ரெண்டு லட்சம் மதிப்புள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்கை பரிசாக வழங்கியிருந்தார். இப்போது இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது.

மேலும் யாரும் எதிர்பாராதது விதமாக ஐசரி கணேஷ் சிம்புக்கு 90 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா வெல்ஃபையர் காரை பரிசாக வழங்கி படக் குழுவை திக்கு முக்காட செய்துள்ளார். அதாவது சிம்புவின் கேரியரில் முக்கியமான படமாக வெந்து தணிந்தது காடு படம் அமைந்துள்ளது.

Also Read :சிம்புக்கு சப்போர்ட் பண்ணிய சேனல், அந்தர் பல்டி அடித்த STR.. எவனையும் நம்பி எதையும் பேசக்கூடாது

தொடர் தோல்வியை கொடுத்து வந்த சிம்புக்கு மாநாடு படம் மிகப்பெரிய வெற்றி கொடுத்த நிலையில் அதற்கு ஒருபடி மேலாக வெந்து தணிந்தது காடு படம் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து சிம்பு, ஐசரி கணேஷ் தயாரிப்பில் கொரோனா குமார் படத்தில் நடித்த வருகிறார்.

simbu-ishari-ganesh

மேலும் சமீபத்தில் இன்டஸ்ட்ரியல் ஹிட் அடித்த விக்ரம் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் லோகேஷுக்கு கார், உதவி இயக்குனர்களுக்கு பைக் மற்றும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு வாட்ச் ஆகியவற்றை உலகநாயகன் கமல் பரிசாக வழங்கினார். தற்போது அதே பாணியை பின்பற்றி பரிசுகளை வாரி வழங்கி உள்ளார் ஐசரி கணேஷ்.

Also Read :கூல் சுரேஷ் வாழ்க்கை இனி என் கையில்.. கூவுனதுக்கு சிம்பு கொடுத்திருக்கும் வாக்குறுதிகள்

Trending News