திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிவகார்த்திகேயனுக்கு கொடுப்பீங்க எனக்கு தர மாட்டீங்களா.. கறாராகப் பேசி சம்பளத்தை உயர்த்திய சிம்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர், டான் போன்ற இரண்டு படங்களும் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்ததால் அவருடைய அடுத்தடுத்த படங்களில், தன்னுடைய சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி இருக்கிறார்.

தொடர்ந்து படங்களுக்கு ஹிட் கொடுப்பதால் தயாரிப்பாளர்களும் சிவகார்த்திகேயனுக்கு எந்த தயக்கமும் இல்லாமல், அவர் கேட்கிற சம்பளத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் சிம்புவும் மாநாடு படத்தின் மூலம் தனது செகண்ட் இன்னிங்சை துவங்கி மாபெரும் வெற்றியை கொடுத்தார்.

Also Read: வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.. 4 நாளில் புஸ்ஸுன்னு போன ‘பத்து தல’

அதன் பிறகு சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய இரண்டு வெற்றிப் படங்களுக்குப் பிறகு சிம்பு தன்னுடைய அடுத்த படத்திற்கு 35 கோடியை சம்பளமாக கேட்கிறாராம்.

இது மட்டுமல்லாமல் ‘சிவகார்த்திகேயனுக்கு கொடுப்பீங்க, எனக்கு தர மாட்டீங்களா!’ என்று கறாராக பேசி தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறுகிறது கோலிவுட் வட்டாரம். முன்பு தனுஷ்-சிம்பு இருவருக்கும் தான் போட்டிருக்கும்.

Also Read: மறக்கமுடியாத கதாபாத்திரத்தை தவறவிட்ட 5 நடிகர்கள்.. தனுஷின் வெற்றி படத்தை இழந்த சிம்பு

தற்போது சிம்பு, சிவகார்த்திகேயனை தன்னுடைய போட்டியாளராக நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று அவருடைய ரசிகர்கள் இந்த சம்பவத்தை வைத்து புரிந்து கொண்டனர். ஆகையால் இனி சிம்பு-சிவகார்த்திகேயன் படங்களுக்கு இடையே தான் கருத்து மோதல் ஏற்படப்போகிறது.

வெந்து தணிந்தது காடு படத்திற்குப் பிறகு சிம்புவின் பத்து தல படப்பிடிப்பு தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. இதில் சிம்புவுக்கு மாஸான கேரக்டர் கொடுக்கப்பட்டிருப்பதால், அதற்காக ரெடி ஆகிக் கொண்டிருக்கிறார்.

Also Read: சிம்பு படத்தில் ரி என்ட்ரி கொடுக்கவிருக்கும் வாரிசு நடிகர்.. 4 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பு

Trending News