நீ என்ன பெரிய உலக அழகியா.? சூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகளுக்குள் நடந்த குடுமிப் பிடி சண்டை

ஹீரோக்களை பொறுத்தவரையில் எந்த ஈகோவும் இருக்காது. இப்போதெல்லாம் இரண்டு, மூன்று ஹீரோக்கள் ஒன்றாக இணைந்து படத்தில் நடிப்பது அதிகமாகிவிட்டது. ஆனால் நடிகைகளுக்குள் அப்படி கிடையாது.

இரண்டு நடிகைகள் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தால் இயக்குனரின் கதி அவ்வளவு தான். அப்படித்தான் திரையுலகில் கொடி கட்டி பறந்த நடிகை ஒருவர் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். அதில் ஏற்கனவே ஒரு இளம் நடிகையும் புக் செய்யப்பட்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் சீனியர் நடிகை அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஆனால் போகப் போக இருவருக்குள்ளும் ஈகோ வெடிக்க ஆரம்பித்து விட்டதாம். அதை தொடர்ந்து நீ என்ன பெரிய உலக அழகியா? என இருவரும் முறைத்தபடியே சூட்டிங் ஸ்பாட்டில் இருந்திருக்கிறார்கள்.

அதிலும் அந்த உயர்ந்த இளம் நடிகை அப்போதுதான் சினிமாவுக்கு வந்த புதிது. ஆனாலும் சீனியர் நடிகையை மதிக்காமல் சில வேலைகளையும் பார்த்து இருக்கிறார். இதனால் கடுப்பான அந்த சீனியர் அழகியும் தன்னுடைய கெத்தை காட்டியிருக்கிறார்.

இப்படி இருந்த மோதல் ஒரு நாள் இருவரும் குடுமிபிடி சண்டை போடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. அவர்களின் சண்டையை சமாதானம் செய்வதற்குள் இயக்குனர் படாத பாடு பட்டு விட்டாராம். அதன் பிறகு இருவரையும் தனித்தனியாக வைத்து காட்சிகளை எடுத்து படத்தை முடித்துக் கொடுத்தாராம். தற்போது அந்த சீனியர் நடிகை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.