முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்த்த தயாரிப்பாளர்.. சத்தம் இல்லாமல் எஸ்கேப்பான ஹீரோ

Gossip: இந்த வருட ஆரம்பமே பெரும் பஞ்சாயத்தில் தான் ஆரம்பித்திருக்கிறது. ரேஸ் ஹீரோவின் படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அதற்கு இப்பொழுது ஆப்பு வைத்து விட்டார்கள்.

ஏற்கனவே படம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இதனால் தயாரிப்பாளரும் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தார். பட்ஜெட்டும் கைமீறி போனது.

அதை எப்படியும் சரிகட்டி விடலாம் என்று அவர் திட்டம் போட்டு இருக்கிறார். ஆனால் தற்போது அத்தனை கனவும் தவிடு பொடியாகி விட்டது.

அதாவது இந்த படம் ஹாலிவுட் படத்தின் காப்பி என உறுதியாகிவிட்டது. இதனால் ரைட்ஸ் விவகாரத்தில் தயாரிப்பு தரப்பு சிக்கிவிட்டதாக கூறுகின்றனர்.

முன்னதாக ஹீரோவிடம் இயக்குனர் வேறு கதையை தான் சொல்லி இருக்கிறார். ஆனால் அவர்தான் இந்த படத்தை எடுக்கலாம் என ஐடியா கொடுத்தாராம்.

சத்தம் இல்லாமல் எஸ்கேப்பான ஹீரோ

சரி கிடைத்த வாய்ப்பை விட வேண்டாம் என இயக்குனரும் அப்படியே படத்தை எடுத்து விட்டார். கதை கருவை மட்டும் வைத்துக்கொண்டு தன்னுடைய ஸ்டைலில் எடுத்திருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது.

தயாரிப்பு தரப்பும் இதை அசால்டாக விட்டதால்தான் பெரும் பூகம்பம் வெடித்திருக்கிறது. இதனால் இரு தரப்பும் தற்போது மல்லு கட்டிக் கொண்டிருக்கிறார்களாம்.

ஆனால் இதற்கு காரணமான ஹீரோவோ இது உங்க பிரச்சனை என நழுவி விட்டார். இதைத்தான் இப்போது திரை உலகில் அதிர்ச்சியோடு பேசி வருகின்றனர்.

Leave a Comment