Gossip: அந்த நடிகர் எது செய்தாலும் சர்ச்சை தான். ஆரம்பத்தில் இருந்தே இவருக்கும் பஞ்சாயத்துக்கும் ஏக பொருத்தமாக இருக்கிறது.
காதல் கல்யாணம் என தொடங்கி விவாகரத்து வரை பிரச்சனை தான். அதில் இப்போது நடிகர் பம்பரமாக சுழன்று நடித்துக் கொண்டிருப்பது ஏன் என தெரிய வந்திருக்கிறது.
முன்பெல்லாம் ஒரு படத்தை முடித்துவிட்டு தான் அடுத்த படத்தை கமிட் செய்வார். ஆனால் இப்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி அட்வான்ஸ் வாங்கி விட்டார்.
விரலுக்கேத்த வீக்கம் தான் வேணும்
விசாரித்ததில் நடிகருக்கு ஏகப்பட்ட கடன் பிரச்சனை இருக்கிறதாம். முன்னாள் மாமனாருக்கு போட்டியாக சொகுசு பங்களாவை கட்டியதுதான் இந்த கடனுக்கு காரணமாம்.
விவாகரத்துக்கு பிறகு ஏகப்பட்ட அலப்பறை கொடுத்து வந்த நடிகர் இப்போது கடனை அடைக்க அசுர வேகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதில் ஒரு படத்துக்கு அட்வான்ஸ் வாங்கி விட்டு டிமிக்கி கொடுத்த சம்பவமும் பிரச்சனையாகி இருக்கிறது. இப்படி தேவையில்லாமல் ஒரு விஷயத்தை செய்து வம்பில் மாட்டிய நடிகர் பற்றிய பேச்சு தான் தீயாக பரவி வருகிறது.