முதல் படத்திலேயே பெரும் கவனம் ஈர்த்த அந்த நடிகர் அடுத்தடுத்த படங்களின் மூலம் தனக்கான இடத்தை பிடித்தார். சினிமா பின்புலம் கொண்ட காரணத்தினால் நடிகருக்கான பெரிய வாய்ப்புகளும் அடுத்தடுத்து குவிய ஆரம்பித்தது.
தற்போது புகழின் உச்சியில் இருக்கும் நடிகருக்கு திருமணம் ஆகி பிள்ளை குட்டிகளும் இருக்கிறது. ஆனால் அவர் இப்போது தன்னுடைய பழைய காதலியின் மயக்கத்தில் இருக்கிறாராம். நடிக்க வந்த புதிதில் அந்த நடிகையோடு இவருக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது.
அதனாலேயே இருவரை பற்றிய கிசுகிசுகளும் தாராளமாக பரவியது. அதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடிகர் திடீரென வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
இதனால் ஏமாற்றம் அடைந்த அந்த நடிகையோ அக்கட தேசத்திற்கு பிழைப்பு தேடி சென்றார். இப்போது அங்கு பிரபலமாக இருக்கும் அவருக்கு புது காதலும் முளைத்திருக்கிறது. தன் காதலனை பெரிய நடிகராக மாற்ற இந்த ஹீரோவிடம் அவர் வாய்ப்பு கேட்டது தனி கதை.
முன்னாள் காதலியின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் இப்போது மீண்டும் பழைய உறவை புதுப்பித்து விட்டாராம். அதன்படி ஹீரோ தன் மனைவிக்கு தெரியாமலும் நடிகை தன் காதலனுக்கு தெரியாமலும் ரகசியமாக சந்தித்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்து உள்ளது.