Gossip: கண்ணுக்கு குளிர்ச்சியாக சில்லுனு இருக்கும் அந்த நடிகையை பார்த்தால் பலரும் சொக்கி தான் போவார்கள். அந்த அளவுக்கு அழகு பதுமையாக இருக்கும் அவருக்கு ஜோடியாக இளம் நடிகர் ஒருவர் நடிக்க கமிட் ஆனார்.
அதிலிருந்தே அந்த ஹீரோவுக்கு தலைகனம் ஏற ஆரம்பித்துவிட்டது. ஏனென்றால் புதுப்புது நடிகைகளுடன் நடித்து வந்த அவர் அப்போது தான் முன்னணி ஹீரோயின் உடன் ஜோடி சேர்ந்தார். அதனாலேயே அவர் சூட்டிங் ஸ்பாட்டில் கொஞ்சம் கெத்துடன் வலம் வர ஆரம்பித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் நடிகையை இம்ப்ரஸ் செய்யவும் முயற்சி செய்திருக்கிறார். அப்போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்திருக்கிறது. அதாவது நடிகையிடம் தன்னுடைய ஹீரோயிசத்தை காட்ட நினைத்த இந்த நடிகர் ரொமான்ஸ் காட்சியில் கொஞ்சம் ஓவராக நடித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் அதை நடிகையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தாராம். ஆனால் போகப் போக நடிகர் அவரை கண்ட இடத்தில் தொடுவது என சேட்டையை காட்ட ஆரம்பித்திருக்கிறார். கடுப்பான நடிகை ஒரு நாள் அவரை ஓங்கி ஒரு அறை விட்டிருக்கிறார்.
இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அந்த நடுவருக்கு ரொம்பவும் அவமானமாக போய்விட்டதாம். அதற்கு அடுத்த நாளிலிருந்து அவர் இருக்கும் இடமே தெரியாமல் இருந்திருக்கிறார். மேலும் நடிகையிடம் சேட்டையை காட்டாமல் படத்தை முடித்துக் கொண்டு தெறித்து ஓடி விட்டாராம்.