பொதுவாகவே கௌதம் படங்கள் என்றாலே பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக ரொமான்டிக் படமாக தான் அமையும். அப்படிப்பட்ட இவர் மாறுபட்ட படங்களாகவும் அதை போர் அடிக்கும் விதமாகவும் சில படங்களை இயக்கியிருக்கிறார். அப்படி இவர் இயக்கத்தில் வெளிவந்து மொக்கை வாங்கிய படங்களை பற்றி பார்க்கலாம்.
நடுநிசி நாய்கள்: கௌதம் மேனன் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு நடுநிசி நாய்கள் என்ற திரைப்படம் வெளிவந்தது. இது உளவியல் சார்ந்து திரில்லர் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் கௌதம் மேனனின் ரொமான்டிக் படங்களாக இல்லாமல் மாறுபட்ட கதையாக படத்தை இயக்கியிருப்பார். இந்தப் படத்திற்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு ஸ்கோர் எதுவும் இல்லை. இதற்கு கலவையான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்தது. இந்த படம் கௌதம் இயக்கிய படங்களில் இது தோல்வி படமாக அமைந்தது.
Also read: டப்பிங் ஆர்டிஸ்ட் ரோகினி உருக உருக எழுதிய காதல் பாடல்.. திகைத்துப் போன கௌதம் மேனன்
நீதானே என் பொன்வசந்தம்: 2012 ஆம் ஆண்டு கௌதம் இயக்கத்தில் நீதானே என் பொன்வசந்தம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் ஜீவா, சமந்தா மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்தார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இதில் ஜீவா மற்றும் சமந்தா இவர்களின் காதல் கதையை மையமாக வைத்து அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் மூன்று நிலைகளை சொல்லும் விதமாக இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. ஆனால் இது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிப் படமாக கௌதமிற்கு அமையவில்லை.
பச்சைக்கிளி முத்துச்சரம்: 2007 ஆம் ஆண்டு கௌதம் இயக்கத்தில் பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் வெளிவந்தது. இதில் சரத்குமார், ஜோதிகா மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தில் ஜோதிகா கதாபாத்திரம் நெகட்டிவ் ரோலில் அமைந்திருக்கும். அதாவது சரத்குமாரின் நிலைமையை புரிந்து கொண்டு அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவரின் கள்ளக்காதலியாக நடித்திருப்பார். இத்திரைப்படம் கௌதமிற்கு பாக்ஸ் ஆபிஸில் சராசரிக்கும் குறைவாகத் தான் வெற்றி கிடைத்தது.
Also read: 6 ஹீரோக்களுக்கு அமைந்த தரமான போலீஸ் கதை.. அஜித், கௌதம் மேனன் காம்போ வேற லெவல்
என்னை நோக்கி பாயும் தோட்டா: 2019 ஆம் ஆண்டு கௌதம் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார், சுனைனா ஆகியோர் நடித்தார்கள். இதற்கான கதையை பற்றி கடைசி வரை ஒரு தெளிவான கதையை தனுஷிடம் சொல்லவில்லை. அதனால் ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு நின்று விட்டது. அதன் பின்னர் பல பேச்சுவார்த்தைக்குப் பிறகு தூசி தட்டப்பட்டு மறுபடியும் இந்த படத்தை கௌதம் இயக்கினார். ஆனால் இது கௌதமிற்கு சினிமா கேரியரில் ஒரு மொக்கையான படமாக தான் அமைந்தது.
அச்சம் என்பது மடமையடா: 2016 ஆம் ஆண்டு கௌதம் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில் சிம்பு, மஞ்சிமா மோகன், சதீஷ் மற்றும் டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தின் முதல் காட்சிகளில் கதைகளை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் எடுக்கப்பட்டு பின்னர் இடைவேளைக்கு பிறகு சம்பந்தமே இல்லாத மாதிரி கதையை கொண்டு வருவார். இந்தப் படம் பார்ப்பவர்களுக்கு போர் அடிக்கும் விதமாக அமைந்திருக்கும். இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.
Also read: வேதாவை மிஞ்சும் கேங்ஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன்.. மைக்கேல் டீசர் விமர்சனம்