GV Prakash: இப்போது தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் இசையமைப்பாளர் என்றால் அனிருத் தான். பெரிய நடிகர்களின் படங்கள் எல்லாமே அனிருத் தான் இசையமைத்து வருகிறார். அந்த வகையில் ரஜினியின் ஜெயிலர், கமலின் இந்தியன் 2, விஜய்யின் லியோ என அனிருத்துக்கு வரிசை கட்டி நிற்கிறது.
இதை அடுத்து அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார். மேலும் பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்திற்கும் இவர்தான் இசையமைப்பாளர். இவ்வாறு சிறு வயதிலேயே உச்ச நட்சத்திரங்கள படங்களில் இசையமைத்து பிசியாக இருந்து கொண்டிருக்கிறார்.
Also Read : பணத்தாசையால் அனிருத் செய்த காரியம்.. இவ்வளவு கீழ இறங்கிட்டாரு
இவருக்கு அடுத்தபடியாக பல இசையமைப்பாளர்கள் இருந்தாலும் அந்த லிஸ்டில் ஜிவி பிரகாஷ் முக்கிய இடத்தில் இருக்கிறார். சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் கதாநாயகன் மோகத்தால் ஹீரோவாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் சில படங்கள் கை கொடுத்தாலும் பெரும்பான்மையான படங்கள் தோல்வியை தான் தழுவி வந்தது.
இதைத்தொடர்ந்து இப்போது மீண்டும் இசையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி பெரிய நடிகர்களுக்கு அடுத்தபடியாக இருக்கும் இளம் ஹீரோக்கள் எல்லோரின் படங்களையும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்கிறார். அதன்படி அவரது லிஸ்டில் எக்கச்சக்க படங்கள் இருந்து வருகிறது.
Also Read : இசைப்புயலை மிஞ்சிய அனிருத்.. ஜவான் படத்துக்கு இசையமைக்க இத்தனை கோடி சம்பளமா?
அதாவது சூர்யா, சுதா கொங்கரா உடன் மீண்டும் இணைய உள்ள நிலையில் அந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்கிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான சூரரைப் போற்று படத்திற்காக ஜிவி பிரகாஷ் தேசிய விருது வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக சிவகார்த்திகேயன், கார்த்தி, விக்ரம் ஆகியோரின் படங்களுக்கும் இசையமைக்கிறார்.
அதோடு மட்டுமல்லாமல் தனுஷ், சன் பிக்சர்ஸ் கூட்டனியில் உருவாகும் படத்திற்கும் ஜீவி தான் இசையமைப்பாளர். மேலும் சூரரைப் போற்று படம் ஹிந்தியில் ரீமேக் ஆகி வரும் நிலையில் அந்த படத்திற்கும் ஜீவி பிரகாஷ் தான் இசையமைத்து வருகிறார். இவ்வாறு சத்தமே இல்லாமல் ஒரு நட்சத்திர பட்டாளத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
Also Read : எடுபடாமல் போன லியோ, பவரை காண்பித்த ஜெயிலர்.. அனிருத் பக்கம் திரும்பிய கத்தி