வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய், ரஜினி, கமலை பற்றி ஒரே வார்த்தையில் கூறி அசத்திய ஹெச்.வினோத்.. தில் ராஜ் இவர பார்த்து கத்துக்கோங்க

வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் வினோத் இப்போது அஜித்தை வைத்து துணிவு படத்தை எடுத்துள்ளார். இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்காக தற்போது இயக்குனர் வினோத் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் வினோத், அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் இயக்கினாலும் மற்ற நடிகர்களை பற்றி தன்னுடைய கருத்தை ஒரே வார்த்தையில் கூறியுள்ளார். அதன்படி சமந்தாவை பற்றி கேட்கும் போது ஸ்மார்ட் என்ற பதில் அளித்துள்ளார். அதுவே நயன்தாரா என்றவுடன் லேடி சூப்பர் ஸ்டார் என்று அவருடைய பட்டத்தை வினோத் கூறியிருந்தார்.

Also Read : நெகட்டிவ் விமர்சனங்களுக்கு வேற லெவல் பதிலடி கொடுத்த அஜித்.. துணிவு பிரிவியூ ஷோ ட்விட்டர் விமர்சனம்

சரி ஹீரோன்களுக்கு வினோத் இது போன்ற பதில் அளித்து வருவதால் ஹீரோவை பற்றி பேட்டியாளர் கேள்வி கேட்டார். சிவகார்த்திகேயன் என்ற உடன் எனக்கு சகோதரர் மாதிரி என்று சொன்னார். விஜய் என்றால் எல்லோரும் போல ஒரு நல்ல என்டர்டைனர் என்பதை வினோத்தும் கூறினார்.

மேலும் தனுஷ் என்றால் நடிகன், ரஜினி என்ற உடன் மாஸ், கமல் என்றால் அறிவு என அடுத்தடுத்த கேள்விகளுக்கு ஒரே வார்த்தையால் அசர வைக்கும் பதிலை வினோத் கூறிவந்தார். தன்னுடைய ஆஸ்தான நடிகரான அஜித் பெயரை கேட்டவுடன் நம்பிக்கை உத்வேகம் என்று பதில் கூறி அனைவரையும் மிரளச் செய்துள்ளார் வினோத்.

Also Read : சென்சாரால் மீண்டும் துணிவுக்கு ஏற்பட்ட பிரச்சனை.. வசூலுக்கு வச்ச பெரிய ஆப்பு

அதுமட்டுமின்றி வினோத் அளித்த அனைத்து பேட்டியிலும் யாரைப் பற்றியும் ஒரு குறை கூட கூறியது கிடையாது. மேலும் துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களுமே வெற்றி பெற வேண்டும் என்ற தான் கருதுவதாக கூறியுள்ளார். ஆனால் வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு துணிவு படத்தை டார்கெட் செய்து பேசினார்.

அப்படி இருக்கையில் வினோத் நெகட்டிவாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதை வைத்தே அவருடைய நல்ல குணம் தெரிகிறது. இதனால் தான் அஜித் வினோத்திற்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வந்துள்ளார். மேலும் வினோத்தின் பேட்டியை பார்த்த ரசிகர்கள் இவரிடம் கத்துக்கோங்க என்று தில் ராஜுவை கிண்டலடித்து வருகிறார்கள்.

Also Read : ப்ளூ சட்டை மாறன், பிரசாந்த் விமர்சனத்திற்கு ஒரு கோடி சம்பளமா? அலறிய துணிவு வட்டாரம்

Trending News