வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அரண்மனையில் நடக்கவுள்ள ஹன்சிகா திருமணம்.. புதுமாப்பிள்ளைக்கு தடபுடலாக நடக்கும் ஏற்பாடு

ஹன்சிகா மோத்வானி வந்த புதிதிலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். ஏனென்றால் பார்ப்பதற்கு குஷ்பூ சாயலில் இருந்த இவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இவர் தமிழ் சினிமாவில் எங்கேயும் காதல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஹன்சிகாவுக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு குவிந்து வந்தது.

விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என டாப் நடிகர்களுடன் ஹன்சிகா ஜோடி போட்டு நடித்தார். இவர் மிகக் குறுகிய காலத்திலேயே கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இந்த சூழலில் சிம்புவை ஹன்சிகா காதலித்து வந்தார். ஒரு சில காரணங்களினால் இந்த காதல் பிரேக்கப்பில் முடிந்தது.

Also Read :கொழுகொழுன்னு இருந்த நம்ம ஹன்சிகாவா இது? எலும்பும் தோலுமாக மாறிய லேட்டஸ்ட் போடோஸ்!

இதைத்தொடர்ந்து சமீபத்தில் ஹன்சிகாவின் மஹா படத்தில் சிம்பு நடித்திருந்தார். மேலும் தமிழில் ஹன்சிகாவின் மார்க்கெட் குறைந்ததால் மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் விரைவில் ஹன்சிகாவுக்கு திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது கிட்டத்தட்ட 450 ஆண்டுகளுக்கு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் தான் ஹன்சிகாவின் திருமணம் நடக்க உள்ளது. இதனால் இந்த அரண்மனையை தற்போது புதுப்பித்த வருகிறார்கள். மேலும் ஹன்சிகாவின் திருமணம் மிகப் பிரம்மாண்டமாக நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read :ஏமாற்றிய சிம்பு.. அதள பாதாளத்தில் தள்ளி விடப்பட்ட ஹன்சிகா

ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்ள போகும் புது மாப்பிள்ளை யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு உள்ளது. அவர் திரைத்துறையைச் சார்ந்தவர் இல்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அவர் ஒரு தொழிலதிபர் என்று தெரியவந்துள்ளது.

அவரைப் பற்றி வேறு எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. ஹன்சிகாவுக்கு வருகின்ற டிசம்பர் மாதம் திருமணம் நடக்க உள்ளதாக உறுதிப்பட தகவல் வெளியாகி உள்ளது. மிகப் விரைவில் ஹன்சிகாவை திருமணம் செய்த கொள்ள போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்ற விபரம் வெளியாக உள்ளது.

Also Read :விஜய்யின் குடும்ப குத்துவிளக்கு ஹன்சிகாவா இது.. உடல் எடை மெலிந்து செம க்யூட்டான புகைப்படங்கள்

Trending News