புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ஒரே படத்தில் ஹீரோ மற்றும் வில்லனாக நடித்த 6 நடிகர்கள்.. சிம்ரன் அழகில் மயங்கிய வாலி அஜித்

நடிகர்கள் இரட்டை வேடங்களில் நடிப்பது அந்த காலத்திலிருந்தே இருக்கிறது. அப்போது விட இன்றைய நாட்களில் டெக்னாலஜி எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே வந்து விட்டது. MGR, சிவாஜி காலங்களில் டூயல் ரோல் என்றால் அண்ணன் -தம்பி, அப்பா-மகன் என இருவருமே ரொம்ப நல்லவர்கள் என கதை அமைக்கப்பட்டு இருக்கும். அதன் பின்னர் அதிலிருந்து கொஞ்சம் மாறி ஒரே படத்தில் ஹீரோக்கள் ஹீரோ மற்றும் வில்லனாக நடிக்க ஆரம்பித்து விட்டனர்.

ஆளவந்தான்: 2001 ஆம் ஆண்டு கமல் நடித்து வெளியான படம் ஆளவந்தான். சித்தி கொடுமையில் வளரும் தம்பி ஒரு மனநோயாளியாக மாறுகிறான். அண்ணன் ராணுவ வீரராக இருப்பான். மனநோயாளியான தம்பி கமல் அப்படியே சிவப்பு ரோஜாக்கள் கமலை பிரதிபலித்தார்.

Also Read: ஆண்டவர் எடுக்கவிருந்த பொன்னியின் செல்வன்.. யார் நடிகர், நடிகைகள்? பட்ஜெட் எவ்ளோ தெரியுமா?

அழகிய தமிழ் மகன்: அழகிய தமிழ் மகன் தளபதி விஜய் முதன் முதலில் நடித்த டூயல் ரோல் படம். இதில் ஒரு விஜய் விளையாட்டு வீரராக வருவார். இன்னொரு விஜய் திருடனாகவும், பெண்கள் மீது ஆசைப்படும் கேரக்டரிலும் நடித்திருப்பார். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை.

நெற்றிக்கண்: 1981 ஆம் ஆண்டு ரஜினி நடித்து வெளியான நெற்றிக்கண் படத்தை SP முத்துராமன் இயக்கி இருந்தார். இதில் ரஜினி அப்பா,மகனாக நடித்திருப்பார். இதில் அப்பா ரஜினி பெண்களின் மீது அதிக ஆசை கொண்ட பிளே பாயாகவும் அவரை திருத்தும் மகன் கேரக்டரிலும் நடித்திருப்பார்.

Also Read: தொடர்ந்து ஏமாற்றும் தலைவர்.. நீங்களா புரிஞ்சுகிட்டா அவர் என்ன பண்ணுவாரு

24: 24 சையின்ஸ் பிக்சன் திரைப்படம். இதில் சூர்யா மூன்று கேரக்டரில் வருவார். இந்த படம் டைம் ட்ராவலை மையமாக கொண்டது. சைன்டிசான தம்பி சூர்யாவையும் அவரது குடும்பத்தாரையும் அண்ணன் சூர்யாவே கொல்வது போல் இந்த படம் இருக்கும்.

வாலி: வாலி அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான திரைப்படம். இயக்குனர் SJ சூர்யாவின் முதல் திரைப்படம் ஆகும். இந்த படத்தில் தம்பி அஜித்தின் மனைவியான சிம்ரன் மீது தீராத காதல் கொள்ளும் அண்ணனாக அஜித் இரட்டை வேடத்தில் கலக்கி இருப்பார்.

மன்மதன்: மன்மதன் சிம்புவின் படம் ஆகும். இந்த படம் கிட்டத்தட்ட கமலின் சிகப்பு ரோஜாக்கள் படத்தை மையமாக கொண்டது. தம்பி சிம்பு காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்வார். அண்ணன் சிம்பு அதனால் பல பெண்களை காதலிப்பது போல் ஏமாற்றி கொலை செய்வார்.

Also Read: சிம்பு, பிரபுதேவா செய்ததை விக்னேஷ் சிவன் செய்யவில்லை.. அதனால்தான் ரொம்ப காதலிக்கிறேன் என்ற நயன்தாரா

Trending News