செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இவங்க 5 பேர் ஒன்னு சேந்தா தளபதி தான் தமிழ்நாட்டோட CM.. வெற்றி பாதையை நோக்கி தவெக

Tamizhaga Vetri Kazhagam: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பதை அதிகாரப்பூர்வமாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துவிட்டார். மேலும் அந்த கட்சி 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட போவதாகவும், தன்னுடைய 69 ஆவது படத்தை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகிக் கொள்ள இருப்பதாகவும் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் விஜய். விஜய்யின் அரசியல் நகர்வு எப்படி இருக்கும் என அவருடைய ரசிகர்களுக்கு ரொம்பவே பதட்டமாக தான் இருக்கிறது. இருந்தாலும் இந்த 5 பேர் ஒன்று சேர்ந்தால் கண்டிப்பாக விஜய் வெற்றி பெறலாம்.

வெற்றி பாதையை நோக்கி தளபதி

ரஜினி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பது பல ஆண்டுகாலமாக ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு கனவாக இருந்தது. தன்னுடைய உடல் நலத்தை காரணம் சொல்லி ரஜினி தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். விஜய் கட்சி ஆரம்பித்திருக்கும் இந்த சூழ்நிலையில் ரஜினி அவருக்கு ஆதரவு தெரிவித்தால் கண்டிப்பாக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரலாம்.

கமலஹாசன்: தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என களம் இறங்கியவர் தான் கமலஹாசன். ஆரம்பத்தில் திராவிட கட்சிகளுக்கு எதிராக அவருடைய அரசியல் நகர்வு இருந்தாலும் பின்னர் திமுக கட்சியுடன் இணக்கமாக இருந்து கொண்டார். விஜய் கட்சி தொடங்கி இருக்கும் இந்த நேரத்தில் தன்னுடைய ஆதரவை அவருக்கு தெரிவித்தால் கண்டிப்பாக கமல் எதிர்பார்த்த மாற்றம் தமிழக அரசியலில் வரும்.

Also Read:ஆப்பனண்டா ஆளே இல்ல, சோலோ ஆயிட்டேன்.. விஜய்யின் அரசியல் முடிவை கொண்டாடும் கூட்டம்

அஜித்குமார்: நடிகர் அஜித்குமாருக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். தன்னுடைய சக நண்பன் ஒரு மாற்றத்தை நோக்கி அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் பொழுது அஜித் தன்னுடைய கண் அசைவில் ஆதரவை தெரிவித்தாலே போதும் அவருடைய ரசிகர்கள் விஜய்க்காக இறங்கி வந்து வேலை செய்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சூர்யா: குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கி வரும் சூர்யா ஏற்கனவே நீட் தேர்வை பற்றி எல்லாம் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதன் மூலம் அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் சூர்யாவுக்கு இருப்பது நன்றாகவே தெரிகிறது. இதுவரை இருக்கும் கட்சிகளால் எதையுமே செய்ய முடியவில்லை என்னும் பொழுது, புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் விஜய்க்கு அவர் ஆதரவு தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

சிம்பு: சிம்புவுக்கு ஏற்கனவே அரசியலுக்கு வரும் எண்ணம் இருப்பது நன்றாக தெரிகிறது. ஆனால் அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தால் விஜய் அளவுக்கு வரவேற்பு இருக்குமா என்பது சந்தேகம்தான். அப்படி இருக்கும் பட்சத்தில் சிம்பு விஜய்க்கு ஆதரவு தெரிவித்து அந்த கட்சியிலேயே ஒரு முக்கியமான நபராக கூட மாறலாம்.

Also Read:2026 சட்டமன்ற தேர்தல் விஜய்யை மைய்யமாக வைத்து தான்.. தளபதியின் வியூகத்தை வெளி கொண்டு வந்த செய்தி தொடர்பாளர்

Trending News