புதன்கிழமை, நவம்பர் 20, 2024

பீஸ்ட் பட வசூலுக்கு ஆப்பு வைக்கும் தியேட்டர்கள்.. பாக்ஸ் ஆபீஸ் கிங்கையே மிரளவிடும் கேஜிஎப்-2

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது. இந்நிலையில் இதுக்க மறுநாள் ஏப்ரல் 14ஆம் தேதி கேஜிஎப் 2 படம் வெளியாக உள்ளது.

இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளது. கேஜிஎப் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் விஜய்யின் படங்கள் எல்லாம் அதிக வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸ் இல் இடம்பெற்ற வருகிறது.

ஒரு நாள் இடைவெளியில் இரண்டு படங்களும் ரிலீஸ் ஆக உள்ளதால் எந்த படம் அதிக வசூல் செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படம் தமிழகத்தில் மட்டும் 1000 திரையரங்குகளுக்கு மேலே வெளியிடப்பட உள்ளது. ஆனால் மறுநாள் கேஜிஎப் இரண்டாம் பாகம் வெளியாவதால் தியேட்டர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட முப்பது சதவிதம் குறையலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருக்கும் விஜய்யின் பீஸ்ட் படம் வசூலில் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் மட்டும் இல்லாமல் மற்ற மாநிலங்களிலும் இந்த வசூல் அடிவாங்கும் என்பதுதான் சற்று பயத்தை காட்டியுள்ளது. மாஸ்டர் படத்தின் வசூல் சாதனையை தற்போது வரை மற்ற படங்கள் முறியடிக்காத நிலையில் விஜய்யின் பீஸ்ட் படம் முறியடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் கேஜிஎஃப் படத்தால் குறைவான திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியாகிறது. இந்நிலையில் வலிமை படத்தை எடுத்துக்காட்டாக வைத்து பீஸ்ட் படம் நேரத்தை படக்குழு குறைத்துள்ளது. பீஸ்ட் படம் இரண்டரை மணி நேரம் அல்லது அதற்கு குறைவான நேரங்களிலேயே படம் இருக்கும் என கூறப்படுகிறது.

பீஸ்ட் படத்தின் வசூலுக்காக பல திட்டங்களை படக்குழு கையாண்டு வரும் நிலையில் இதை அனைத்தும் தவிடுபொடி ஆக்குவதற்காக கேஜிஎஃப் படம் வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களும் வெளியானால் தான் அதிக வசூல் எந்த படம் பெற்றுள்ளது என்பதை பார்க்க முடியும்.

- Advertisement -spot_img

Trending News