Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தளபதி 68 – சிவகார்த்திகேயன் பட இயக்குனாரா.? ஒரு ஹிட் படத்திற்கு தலைகால் புரியாமல் ஆட்டமா!

தளபதி 68 – சிவகார்த்திகேயன் பட இயக்குனாரா.? ஒரு ஹிட் படத்திற்கு தலைகால் புரியாமல் ஆட்டமா!

விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு […]

விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படம் உருவாகயுள்ளது. தற்போது லோகேஷ் அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார். ஏற்கனவே விஜய், லோகேஷ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

சமீபத்தில் தளபதி 68வது படத்தை சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியானது. தனது சொந்த கதையை படமாக எடுத்த சிபிச்சக்கரவர்த்தி முதல் படத்திலேயே 100 கோடி வசூலை பெற்றுத் தந்துள்ளார்.

இதை தொடர்ந்து இவரின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. இந்நிலையில் சிபிசக்கரவர்த்தி பேசுகையில் தன்னுடைய அடுத்த படத்திற்கான கதை தயார் செய்து வருகிறேன். மேலும் இப்பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

இதனால் முழுக்கதையும் எழுதிய பிறகு யார் இந்தக் கதைக்கு பொருத்தமாக இருப்பார்களோ அவர்களிடம் கால்ஷீட் கேட்ட பிறகுதான் இப்படத்தை எடுக்க முடியும். ஆனால் தற்போது நான் விஜயை வைத்து படம் இயக்குவதாக வெளியான தகவல் வதந்தி என சிபிச்சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

ஒரு இயக்குனரை ஹீரோவை மனதில் வைத்துதான் கதையை எழுதுவார். சிபிச் சக்கரவர்த்தி இயக்குனர் அட்லீ இடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இதனால் அட்லீ விஜய்யை வைத்து இயக்கிய பல படங்களில் சிபிச் சக்ரவர்த்தியும் பணிபுரிந்துள்ளார். இதனால் தற்போதும் விஜய்யின் உத்தரவுக்காக சிபிச்சக்கரவர்த்தி காத்திருப்பது போல் தெரிகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.