புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அண்ணன்னு சொல்லி, ஐசரி கணேஷ் அடிச்ச அந்தர் பல்டி.. உலக நாயகனால் தலை தப்பிய சிம்பு

Actor Simbu: சிம்பு செம்மையான கம்பேக் கொடுத்தார். மாநாடு, வெந்து தணிந்தது கடைசியாக பத்து தல என தொடர்ந்து மூன்று படங்களின் மூலம் தன்னை யார் என்று நிரூபித்தார். ஆனால் சமீபத்தில் சிம்பு, தன்னுடைய சினிமா கேரியரையே ஊத்தி மூடப் போகும் அளவுக்கு ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டார்.

உலகநாயகன் காப்பாற்றியதால் சிம்புவின் தல தப்பிச்சு. சிம்பு இரண்டு வருடத்திற்கு முன்பு பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தயாரிப்பில் கொரோனா குமார் என்ற படத்தில் கமிட் ஆனார். படத்திற்கான முழு ஏற்பாடும் செய்த பின் படப்பிடிப்பை அப்படியே நிறுத்திவிட்டு வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தில் நடிக்க கிளம்பிவிட்டார்.

Also Read: இளம் நடிகையுடன் டேட்டிங் செய்யும் சிம்பு.. அம்பலத்திற்கு வந்த ரகசிய உறவு

ஆனால் மாநாட்டுக்கு பின் சிம்பு அவரை டீலில் விட்டு விட்டார். அதற்கு ஐசரி கணேஷ் சிம்புவை நடிக்க விடமாட்டோம் என பிரச்சனை செய்தார். சிம்பு அடுத்ததாக கமல் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் திடீரென, ‘கமல் எனக்கு அண்ணன் மாதிரி. நாங்கள் இருவரும் அப்படித்தான் பழகி வருகிறோம்’ என்று ஐசரி கணேஷ் அந்தர் பல்டி அடித்துள்ளார்.

சிம்பு சார் ஒரு பெரிய இடத்திற்கு வரவேண்டும். அவரை நான் சின்ன வயதில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன். சிம்பு சார் கமல் படத்தை முடித்தவுடன் எனக்கு படம் பண்ணட்டும், அதற்காக டேட் மட்டும் வாங்கித் தாருங்கள் என்று ஐசரி கணேஷ் கூறிவிட்டாராம்.

Also Read: தைரியம் இல்லாமல் போன சிம்பு.. எஸ் ஜே சூர்யாவால் பறிபோன பட வாய்ப்பு

ஒருவேளை கமல் மட்டும் சிம்புவை தன்னுடைய அடுத்த பட தயாரிப்பில் இணைக்கவில்லை என்றால் நிச்சயம் சிம்புவின் கதி அதோ கதி தான். ஆனால் கமல் செய்த உதவியால் தான் சிம்புவுக்கு சினிமாவில் ஏற்பட இருந்த மிகப்பெரிய பிரச்சனை விலகியது.

இனியாவது தன்னுடைய திமிர்த்தனத்தையும் விளையாட்டு தனத்தையும் ஓரம் கட்டி விட்டு எந்த பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ளாமல் இருக்கணும் என்று கமலும் சிம்புவுக்கு அறிவுரை சொல்லி, தன்னுடைய படத்தில் இணைத்து இருக்கிறார். இந்த படத்தை நிச்சயம் வித்தியாசமான கதையில் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

Also Read: சிம்பு படுத்திய பாடு.. வந்த வேகத்தில் ஓட்டம் பிடித்த பிரபல இயக்குனர்

Trending News