Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தக் லைஃப்யால் கமலுக்கு நஷ்டம்.. ஒரு நபருக்கு தான் ஜாக்பாட்!

தக் லைஃப்யால் கமலுக்கு நஷ்டம்.. ஒரு நபருக்கு தான் ஜாக்பாட்!

Kamal : மணிரத்னம், கமல் கூட்டணியில் வெளியான தக் லைஃப் படம் முதல் நாளே மோசமான விமர்சனங்களை சந்தித்தது. இப்படத்தில் கமலுக்கு இணையான கதாபாத்திரம் சிம்புவுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆகையால் இது ஒரு நட்சத்திர படமாக பார்க்கப்பட்ட நிலையில் பாக்ஸ் […]

Kamal : மணிரத்னம், கமல் கூட்டணியில் வெளியான தக் லைஃப் படம் முதல் நாளே மோசமான விமர்சனங்களை சந்தித்தது. இப்படத்தில் கமலுக்கு இணையான கதாபாத்திரம் சிம்புவுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆகையால் இது ஒரு நட்சத்திர படமாக பார்க்கப்பட்ட நிலையில் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்தது.

மற்றொருபுறம் கமல் பேச்சால் கர்நாடகாவில் இந்த படம் வெளியிட தடை செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் இப்போது அதற்கான வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அப்படி கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியானாலும் பெரிய வசூல் பெற வாய்ப்பு இல்லை.

அதுமட்டுமல்லாமல் ஓடிடியில் தக் லைஃப் படம் விற்கப்பட்ட நிலையில் படத்தின் தோல்வியால் 25 சதவீதம் ஒப்பந்தம் செய்யப்பட்ட தொகையிலிருந்து குறைக்க நெட்பிளிக்ஸ் முடிவெடுத்திருக்கிறது. இதனால் படத்தின் தயாரிப்பாளர்களான மணிரத்னம் மற்றும் கமல் இருவருக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

தக் லைஃப் படத்தால் ஒரு நபருக்கு அடித்த ஜாக்பாட்

அதேபோல் சிம்புவும் தக் லைஃப் படத்திற்கு பிறகு சம்பளத்தை உயர்த்தலாம் என்று நினைத்த நிலையில் அவருக்கும் ஏமாற்றமே. ஆனால் இந்த படத்தால் ஒருவருக்கு ஜாக்பாட் என்றால் அது சின்மயி தான். அதாவது இந்த படத்தில் விழாவில் முத்தமலை பாடலை சின்மயி பாடியிருந்தார்.

இதனால் ரசிகர்கள் அவருக்கு மிகுந்த ஆதரவு கொடுத்து வருகின்றனர். இதை அடுத்து இசையமைப்பாளர் இமான் சின்மயிக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். விஜய் ஆண்டனி, ஜேம்ஸ் வசந்த் போன்றோரும் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கொடுப்பதாக உறுதியளித்திருக்கின்றனர்.

இப்படிப்பட்ட குரல் வளம் உள்ளவரை இவ்வளவு வருடங்களாக தடை செய்து வைத்திருக்கிறார்களே என்று ரசிகர்கள் கொந்தளித்தனர். மேலும் இப்போது சின்மயி மீண்டும் சினிமாவில் செம பிசியான பாடவராக மாற இருக்கிறார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.