Jailer 12th Day Box Office Collection: ஜெயிலர் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாகி இருந்தது. ரஜினியின் படங்கள் இதுவரை செய்த சாதனை அனைத்தையும் முறியடித்து வருகிறது ஜெயிலர். அந்த அளவுக்கு வசூலை வாரிக் குவித்து வருகிறது. படம் வெளியான சில நாட்களிலேயே விக்ரம் படத்தின் வசூலை முறியடித்தது.
லோகேஷ், கமல் கூட்டணியில் வெளியாகி இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்த விக்ரம் படம் 400 கோடியை தாண்டி வசூல் செய்தது. ஆனால் அசால்ட் ஆக ஒரு வாரத்திலேயே ஜெயிலர் படம் 400 கோடியை நெருங்கி விட்டது. இந்த சூழலில் ரஜினி இமயமலை சென்ற நிலையில் இன்று சென்னை திரும்பிய நிலையில் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
Also Read : தலையை சுற்ற வைக்கும் ஜெயிலர் வர்மனின் சம்பளம்.. ஒரே படத்தால் எகிறிய மார்க்கெட்
அதாவது தமிழ் சினிமாவில் எடுத்த படங்களில் அதிக வசூல் செய்த படமாக மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படம் இருந்தது. இப்போது பொன்னியின் செல்வன் வசூலை முறியடித்து 500 கோடியை தாண்டி ஜெயிலர் கலெக்ஷன் செய்துள்ளது. அதாவது 12 வது நாள் முடிவில் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 510 கோடி வசூல் செய்திருக்கிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் வணிக ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. 2023 ஆம் ஆண்டு இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாக ஜெயிலர் உள்ளது. மேலும் படத்தின் வெற்றிக்கு காரணம் சூப்பர் ஸ்டார் மட்டுமன்றி வலுவான கதைகளத்தை நெல்சன் கொடுத்திருந்தார்.
Also Read : ஜெயிலர்ல ரஜினிக்கு 80 கோடி சம்பளம் எல்லாம் பொய் கணக்கு.. எம்மாடியோ லாபத்துல ஷேர் மட்டும் இத்தனை மடங்கா!
அதோடு மட்டுமல்லாமல் நடிகர்களுக்கு சரியான கதாபாத்திரம் அவர்களின் சிறந்த நடிப்பு ஆகியவை மேலும் வலு சேர்த்து இருந்தது. படத்தில் ஆக்சன் காட்சிகள் மிகவும் பக்கபலமாக அமைந்திருந்தது. இந்தியாவில் ஜெயிலர் படம் 330 கோடி வசூல் செய்த நிலையில் வெளிநாட்டுகளில் 180 கோடி வசூலித்துள்ளது.
மேலும் வரும் வாரங்களில் பாக்ஸ் ஆபீஸில் ஜெயிலர் படம் இன்னும் நல்ல வசூலை பெறும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதன்படி சினிமா ஆலோசகர்கள் ஜெயிலர் படம் 700 கோடியை நிச்சயம் தாண்டும் என கணித்துள்ளனர். ரஜினிக்கு திகட்ட திகட்ட வெற்றியை நெல்சன் கொடுத்திருக்கிறார். இதனால் யாரும் தொட முடியாத உயரத்திற்கு பறந்து இருக்கிறார் கழுகு ரஜினி.
Also Read : காலில் விழுந்ததை தவறாக சித்தரித்தாலும் வசூலில் வெளுத்து வாங்கும் ஜெயிலர்.. தனிக்காட்டு ராஜாவாக ஜெயித்த ரஜினி