திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஓரளவுக்கு மேல பேச்சே இல்ல வீச்சு தான்.. சொல்லி அடித்த சூப்பர் ஸ்டார், மிரட்டும் 5-ம் நாள் வசூல்

Jailer Collectin Report: சன் பிக்சர்ஸ், சூப்பர் ஸ்டார், நெல்சன் கூட்டணியில் கடந்த வாரம் வெளிவந்த ஜெயிலர் வரலாறு காணாத அளவுக்கு வெற்றிவாகை சூடி இருக்கிறது. முதல் நாளிலேயே அமோக வரவேற்பை பெற்ற இப்படம் வெளியாகி ஐந்து நாட்கள் கடந்த பிறகும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதற்கு முழு காரணம் சூப்பர்ஸ்டார் என்ற ஒற்றை மனிதர் தான் என்பது அனைவருக்கும் தெரியும். அவருடைய அசத்தலான அதே சமயம் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பும், கெத்தும் தான் திரும்பத் திரும்ப படத்தை பார்க்க வைக்க காரணமாக இருக்கிறது.

Also read: தெரியாத்தனமாக தனுஷுக்கு ரஜினி செய்த நல்லது.. ஜெயிலரால், கேப்டன் மில்லருக்கு எகிறும் கெடுபிடி

மேலும் தரமான வெற்றியை கொடுத்தே தீர வேண்டும் என்ற வெறியில் களமிறங்கிய நெல்சன் தலைவருக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார். படத்தில் ஒரு சில விஷயங்கள் லாஜிக் மீறல்களாக பார்க்கப்பட்டாலும் மொத்தத்தில் இந்த ஜெயிலர் வசூலில் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

அந்த வகையில் முதல் நாளிலேயே 100 கோடி வரை வசூலித்த இப்படம் அடுத்தடுத்த நாட்களில் 200, 300 என்று பல கோடிகளை தட்டி தூக்கி இருந்தது. மேலும் இதற்கு முன்பு பிரம்மாண்டமாக வெளிவந்த பல படங்களின் சாதனையை ஜெயிலர் வெளியான மூன்று நாட்களிலேயே முறியடித்து விட்டது.

Also read: சன் குடும்பத்திற்கு மருமகனாகும் அனிருத்.. சூட்சமமாக சொன்ன ரஜினி, பரபரக்கும் திரையுலகம்

அந்த வரிசையில் தற்போது ஐந்தாவது நாளின் முடிவில் ஜெயிலர் 350 கோடிகளை தாண்டி வசூல் லாபம் பார்த்திருக்கிறது. இதுதான் இப்போது ஒட்டு மொத்த திரையுலகையும் உலுக்கி எடுத்து வருகிறது. இன்னும் சில தினங்களில் இந்த வசூல் 500 கோடி என்ற நிலையை எட்டி விடும் என்ற கருத்து கணிப்புகளும் எழுந்துள்ளது.

அதற்கேற்றார் போல் விடுமுறை தினமான இன்றும் திரையரங்குகள் ரசிகர்களின் ஆரவாரத்தோடு ஹவுஸ் ஃபுல்லாக இருக்கிறது. அந்த வகையில் இந்த வார இறுதிக்குள் ஜெயிலர் தமிழ் சினிமாவில் இதுவரை செய்யாத ஒரு சாதனையை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: ஜெயிலர் சூட்டுடன் ஆரம்பிக்கப் போகும் தலைவர்-170.. கேட்ட சம்பளத்தை அப்படியே கொடுத்த லைக்கா

Trending News