திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

முதல் மூன்று நாள் மொத்த தியேட்டர்களும் ஹவுஸ்ஃபுல்.. ஜெயிலர் வசூல் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

Jailer: இதோ அதோ என்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த ஜெயிலர் நாளை மறுநாள் திரைக்கு வர இருக்கிறது. சூப்பர் ஸ்டார் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

இதுவே பெரும் எதிர்பார்ப்பை தூண்டிய நிலையில் இசை வெளியீட்டு விழாவில் தலைவரின் பேச்சு, பாடல்கள் என அனைத்தும் பட்டையை கிளப்பியது. அதனாலேயே படத்தை காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே அத்தனை டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டது.

Also read: சொந்த குரலில் லதா ரஜினிகாந்த் பாடிய 5 பாடல்கள்.. நட்புக்காக செய்த விஷயம்

அதிலும் சென்னையில் முதல் மூன்று நாட்களுக்கு எந்த தியேட்டரிலும் டிக்கெட்டுகள் கிடையாது. அத்தனையும் ஹவுஸ் ஃபுல்லாக இருக்கிறது. இதுதான் பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாக சூப்பர் ஸ்டார் படங்களுக்கு இது போன்ற ஆரவாரம் இருக்கத்தான் செய்யும்.

ஆனால் இந்த முறை அது பல மடங்காக மாறி இருக்கிறது. அந்த வகையில் படம் வெளிவருவதற்கு முன்பே ஜெயிலர் வசூலிலும் கொடிகட்டி பறக்கிறது. அதாவது ஜெயிலர் படம் டிக்கெட் முன்பதிவில் இதுவரை மொத்தமாக 20 கோடி வரை வசூல் வேட்டை நடத்தி இருக்கிறது.

Also read: வசூலில் ரஜினியை தோற்கடித்த 2 ஜாம்பவான்கள்.. கூட்டணி சேர்ந்ததால் பதட்டத்தில் திரையுலகம்

அந்த வகையில் இந்திய அளவில் பார்க்கையில் 6 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு 14 கோடி வரை வசூல் லாபம் பார்த்திருக்கிறது. இது துணிவு படத்தின் சாதனையை விட அதிகமாகும். அதை தொடர்ந்து தமிழ்நாட்டில் மட்டுமே ஜெயிலர் 8.5 கோடி வரை வசூலித்து டிக்கெட் முன்பதிவில் சாதனை படைத்திருக்கிறது. அதேபோன்று கர்நாடகாவில் 4.5 கோடியும், அமெரிக்காவில் இந்திய கணக்குப்படி 4.21 கோடியும் வசூலித்திருக்கிறது.

மேலும் கனடா, இலங்கை, மலேசியா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் சேர்த்து 4 கோடி வரை வசூலாகி இருக்கிறது. அது மட்டும் இன்றி இப்படம் முதல் நாளிலேயே உலக அளவில் 80 கோடி வரை வசூலிக்கும் என்ற கருத்து கணிப்புகளும் எழுந்துள்ளது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தரமான வெற்றியை ருசிக்க போகிறார் என்பதில் சந்தேகம் இல்லை.

Also read: ரஜினி முகத்தில் காரி துப்பிய பாரதிராஜா.. சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு பின்னால் இருக்கும் உழைப்பு

Trending News