Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தக் லைஃப்க்கு தடையா.? அப்ப ஜனநாயகனுக்கு வைங்க செக், ரூட் மாறும் பிரச்சினை

தக் லைஃப்க்கு தடையா.? அப்ப ஜனநாயகனுக்கு வைங்க செக், ரூட் மாறும் பிரச்சினை

Kamal-Vijay: தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்ற எதிர்ப்பு குறல்கள் அதிகரித்துள்ளது. கமல் பேசிய கருத்து இப்படி ஒரு விஸ்வரூபம் எடுக்கும் என அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். நீதிமன்றம் வரை சென்ற இப்பிரச்சனையில் நீதிபதி […]

Kamal-Vijay: தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்ற எதிர்ப்பு குறல்கள் அதிகரித்துள்ளது. கமல் பேசிய கருத்து இப்படி ஒரு விஸ்வரூபம் எடுக்கும் என அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

நீதிமன்றம் வரை சென்ற இப்பிரச்சனையில் நீதிபதி கமலை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளார். அப்படி என்ன ஈகோ உங்களுக்கு? மன்னிப்பு கேட்க முடியாதா? என காரசாரமான கேள்விகள் எழுந்துள்ளது.

இப்போது வரை கமல் மன்னிப்பு கேட்கவில்லை. அது மட்டும் இன்றி கர்நாடகாவில் படம் வெளியாகாது என்றும் சொல்லிவிட்டார். இவ்வாறாக பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

ரூட் மாறும் பிரச்சினை

இதில் தற்போது கமலுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுக்க தொடங்கிவிட்டனர். அதிலும் தக் லைஃப் கர்நாடகாவில் ஓடலன்னா ஜனநாயகன் தமிழ்நாட்டுல ஓடாது என நெட்டிசன்களும் அரசியல் புள்ளிகளும் பதிலடி கொடுக்கின்றனர்.

ஏனென்றால் ஜனநாயகன் படத்தை தயாரிப்பது கன்னட தயாரிப்பாளர் தான். இப்படியாக இந்த பிரச்சனை திசை மாறி இருக்கிறது. அதில் பதிலுக்கு பதில் என ஏன் இப்படி ஒரு வன்மம்.

இந்தப் பிரச்சனையில் விஜய் படத்தை எதற்கு இழுக்க வேண்டும் என்ற கேள்வியையும் அவரின் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். ஆனால் இந்த இடத்தில் நம்முடைய எதிர்வினை எப்படி இருக்கும் என காட்ட வேண்டும்.

இந்தப் படத்தில் பல பேருடைய உழைப்பு இருக்கிறது. கமல் பேசிய கருத்துக்காக அவர்களை தண்டிப்பது சரி கிடையாது.

இது வேண்டுமென்றே அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த இடத்தில் கமலுக்கு ஆதரவாக ஒவ்வொருவரும் நிற்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கருத்து.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.