Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஹீரோயினை தூக்கி சாப்பிட்ட பாடகி.. அடுத்த படத்திற்கு லாக் செய்த விக்னேஷ் சிவன், நயன்தாரா

அனிருத் இசையில் பெரும்பாலான பாடல்கள் ஜோனிதா காந்தி பாடியுள்ளார். இவரது குரலில் வெளியான செல்லமா பாடல் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கூட அரபி குத்து என்ற பாடல் மூலம் உலகளவில் பிரபலமானார். அரபிக் குத்து பாடலில் […]

அனிருத் இசையில் பெரும்பாலான பாடல்கள் ஜோனிதா காந்தி பாடியுள்ளார். இவரது குரலில் வெளியான செல்லமா பாடல் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கூட அரபி குத்து என்ற பாடல் மூலம் உலகளவில் பிரபலமானார். அரபிக் குத்து பாடலில் ஹீரோயின் பூஜா ஹெக்டேயை தூக்கி சாப்பிட்டதாக ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.

ஏற்கனவே இவர் பாடிய பாடலை பார்த்த இயக்குனர்கள் பலரும் தங்களது படங்களில் கதாநாயகியாக நடிக்க வைக்க முயற்சி செய்தனர். ஆனால் ஜோனிதா காந்தி பாடல் பாடுவதில் அதிக ஆர்வம் இருப்பதால் நடிக்க வந்த வாய்ப்பை உதறித் தள்ளி வந்தார். ஆனால் தற்போது விநாயக் என்ற அறிமுக இயக்குனர் இயக்க உள்ள படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் சூர்யாவிற்கு நண்பனாக நடித்த கிருஷ்ணகுமார் நடிக்கவுள்ளார். இப்படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து தயாரிக்க உள்ளனர்.

இது ஒரு காதல் கதையை மையமாக கொண்டு உருவாக உள்ளதாகவும் இவர்களுக்குள் இருக்கும் உண்மை காதலால் ஏற்படும் விளைவுகளையும் அதனை இவர்களிருவரும் சமாளித்து எப்படி இறுதியில் சேருகிறார்கள் என்பது தான் படத்தின் கதை என படக்குழுவினர் கூறியுள்ளனர்.

ஜோனிதா காந்தி இடம் முதலில் கதாநாயகியாக உங்களை தேர்வு செய்து யார் எனக் கேட்டதற்கு தன்னுடைய பாடலை பார்த்த பல இயக்குனர்கள் தன்னை கதாநாயகியாக நடிக்க வைக்க முயற்சி செய்தனர். ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லாமல் இருந்ததால் நடிக்க மறுத்து வந்தேன். இப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் காதல் படம் என்பதால் உடனே ஓகே சொல்லிவிட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் சமீபகாலமாக இசையமைப்பாளர்கள் நடிகராகி விடுகிறார்கள். பாடகிகள் கதாநாயகி ஆகிவிடுகிறார்கள். இப்படியே போனால் யாருதான் பாடல் பாட போகிறார்கள் யார் தான் இசையமைப்பாளர் என்பது தெரியவில்லை என சமூக வலைதளங்களில் ஒரு சில ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

jonita gandhi
jonita gandhi
V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.