வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்.. ரகசியமாக வெளிவந்த உண்மை

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா என தற்போது சினிமாவில் படு பிசியாக இருக்கும் பிரபலங்களை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய படம்தான் காத்துவாக்குல 2 காதல். தனித்தனியாக இவர்களது கால்சீட் கிடைப்பதே குதிரைக் கொம்பாக உள்ள நிலையில் அனைவரையும் ஒரே நேரத்தில் வைத்து படமெடுப்பது பெரிய காரியம்தான்.

ஆனால் என்ன புரோஜனம். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் சமந்தா நடித்த கதீஜா கதாபாத்திரத்தில் முதலில் திரிஷா நடிப்பதாக இருந்ததாகவும், அவரின் கால்ஷீட் கிடைக்காததால் பின்பு சமந்தா ஒப்பந்தமானார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் விக்னேஷ் சிவன் கூறியிருந்தார்.

இந்நிலையில் காத்துவாக்குல 2 காதல் படத்தின் கதையை வேறு ஒரு நடிகருக்காக எழுதியது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரம் அவருக்கு சுத்தமாகவே செட் ஆகவில்லை என்றே சொல்லலாம். இது ஒரு ப்ளேபாய் கதாபாத்திரம்.

சமீபகாலமாக விஜய் சேதுபதி வெயிட்டான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் அவருக்கு ஆக்சன் படம் தான் தற்போது கைகொடுத்து வருகிறது. இந்நிலையில் காத்துவாக்குல 2 காதல் படம் விஜய் சேதுபதியின் கேரியரில் மிகப்பெரிய சறுக்கலை ஏற்படுத்தி உள்ளது .

காத்துவாக்குல 2 காதல் படத்தை சிவகார்த்திகேயனுக்காக தான் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். ஆனால் கதையை கேட்ட சிவகார்த்திகேயனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். உடனே இப்படத்தை நிராகரித்துவிட்டார். அதன் பின்புதான் விஜய் சேதுபதி இப்படத்தில் நடித்துள்ளார்.

96 போன்ற ஒரு உணர்வுபூர்வமான காதல் கதை விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ஆனால் காத்துவாக்குல 2 காதல் போன்ற ஒரு ப்ளேபாய் கதாபாத்திரம் சுத்தமாக விஜய் சேதுபதிக்கு செட் ஆகவில்லை. படத்தின் தோல்விக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.

Trending News