தமிழ் சினிமா தற்போது பொற்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஏனென்றால் சமீப காலமாக தமிழில் வெளிவந்த அத்தனை திரைப்படங்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் வசூலிலும் நல்ல லாபம் பார்த்து வருகிறது.
அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் கூட அந்த திரைப்படம் பட்டையை கிளப்பியது.
Also read : லைக்காவை குழப்பி மொத்த பிளானையும் கெடுத்த மணிரத்தினம்.. ரஜினிக்கு பறிபோன வாய்ப்பு
அதைத்தொடர்ந்து திருச்சிற்றம்பலம், வெந்து தணிந்தது காடு திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் தங்கள் அமோக ஆதரவை கொடுத்தனர். இதனால் அந்த திரைப்படங்களும் வசூலில் நல்ல லாபம் பார்த்தது. இந்தப் படங்களை எல்லாம் ஓவர் டேக் செய்யும் அளவுக்கு தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
மணிரத்னம் இயக்கத்தில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் அந்த வரலாற்று காவியம் தற்போது பல கோடிகளை தாண்டி வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கலெக்ஷனை எந்த திரைப்படமும் இவ்வளவு குறுகிய காலத்தில் பார்த்தது கிடையாது.
Also read : கெஞ்சி கதறியும் இரக்கம் காட்டாத கமல்.. பெரும் நஷ்டத்தை சந்தித்த விவேக்
அந்த அளவிற்கு படம் வெளிவந்த ஒரு வாரத்திலேயே எக்கச்சக்க லாபம் பார்த்துள்ளது. இதைப் பற்றி கமல்ஹாசன் சமீபத்தில் நடந்த பொன்னியின் செல்வன் விழாவில் மிகவும் சிலாகித்து பேசி இருக்கிறார். இந்த நான்கு திரைப்படங்களையும் குறிப்பிட்டு பேசிய அவர் படக்குழுவினருக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.
மேலும் தமிழ் சினிமா தற்போது வேற லெவலில் சென்று கொண்டிருக்கிறது என்றும் இதுதான் உண்மையான பொற்காலம் என்றும் அவர் குறிப்பிட்டார். இப்படி பாரபட்சம் பார்க்காமல் எல்லா திரைப்படங்களையும் வாழ்த்தி பேசும் கமலை தற்போது அனைவரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
Also read : 300 கோடியை தாண்டி வசூல் செய்த 6 படங்கள்.. ஆறே நாட்களில் சாதனையை முறியடித்த பொன்னின் செல்வன்