வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சிவகார்த்திகேயன் கூட்டணியை உறுதி செய்த கமல்.. இணையத்தில் காட்டுத் தீயாக பரவும் SK21 அறிவிப்பு

சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் பட தோல்விக்கு பிறகு மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு முன்னதாக ஆகஸ்ட் மாதம் சிவகார்த்திகேயனின் அயலான் படம் வெளியாக உள்ளது. அறிவியல் சார்ந்த கதையாக எடுக்கப்பட்டுள்ள அயலான் படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

மேலும் அயலான் படத்தை பாலிவுட் நடிகர் அமீர்கான் ஹிந்தியில் வெளியிடுகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் கமலின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்தின் பேனரில் ஒரு படம் பண்ண உள்ளதாக அறிவிப்பு வெளியானது. தற்போது கமல் இளம் நடிகர்களின் படங்களை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

Also Read : எங்கு சென்றாலும் துரத்தும் சிவகார்த்திகேயன்.. தனுஷை ஒரு கை பார்க்க பெரிய ஹீரோவின் வாழ்த்து

அந்த வகையில் சிவகார்த்திகேயனின் படங்களுக்கு தற்போது நல்ல வரவேற்பு உள்ளதால் அவருடைய படத்தை தயாரிக்க கமல் முன்வந்துள்ளார். அந்த வகையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி சிவகார்த்திகேயனின் 21 வது படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

மேலும் ராஜ்குமார்  இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருக்கிறார். இதுவரை சிவகார்த்திகேயனின் பெரும்பாலான படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்திருந்தார். ஆனால் எஸ்கே 21 படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார்.

Also Read : சிவகார்த்திகேயன் ஜிம் பாட்னர் யார் தெரியுமா?. சந்தானம் பட நடிகை வெளியிட்ட வைரல் போட்டோ

மாவீரன் படப்பிடிப்பு மிக விரைவில் முடிய உள்ளதால் சிவகார்த்திகேயன், கமல் இணைய உள்ள படத்தின் படப்பிடிப்பு சீக்கிரம் தொடங்க உள்ளது. மேலும் படத்தில் மற்ற நடிகர், நடிகைகளை படக்குழு தேர்வு செய்வதில் மும்மரம் காட்டி வருகிறது. இப்போது எஸ்கே 21 படத்தின் அறிவிப்பு சிவகார்த்திகேயனின் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

sivakarthikeyan-21

Also Read : தீபாவளி ரேஸுக்கு தயாராகும் 5 படங்கள்.. ஏலியன் துணையோடு களமிறங்கும் சிவகார்த்திகேயன்

Trending News