திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிவகார்த்திகேயனை நம்பி தெருவுக்கு வந்த கமல்.. 2000 கோடி போச்சு சோனமுத்தா

SK21 latest update: லோகேஷ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த “விக்ரம்” ப்ளாக் பஸ்டர் ஹிட்  அடித்ததை தொடர்ந்து கமல் அவர்கள் தன் பணத்தை முதலீடு செய்யும் நோக்கில் இளம் இயக்குனர்களுடன் கதை கேட்டு பட தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். SK21, STR48 மற்றும் விக்னேஷ் சிவன் உடன் ஒரு படம் என  ஒரு லிஸ்ட்டே வைத்திருக்கிறார்.

SK21: “ரங்கூன்” புகழ் ராஜ்குமார் பெரியசாமி இடம் கதை கேட்ட கமல், எஸ்கே21 புக் செய்து விட்டார். ராஜ்கமல் பிலிம்ஸ் சோனி பிக்சர்ஸ் மற்றும் ஆர் மகேந்திரன் தயாரிப்பில் எஸ்கே 21 ரெடியாகி வருகிறது. இந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ராணுவ வீரரின் கதை.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதைப்படி காட்சிகள் பலவும் காஷ்மீரில் படமாக்க திட்டமிடப்பட்டு பட குழுவினர் காஷ்மீரில்  முகாமிட்டு உள்ளனர் 50 நாட்கள் என திட்டமிடப்பட்ட படப்பிடிப்பு 90 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

Also Read:பொங்கல் ரேசில் களம் இறங்கும் 4 படங்கள்.. சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை உடைக்க வரும் ஹீரோ

படம் பாதி முடிவடைந்த நிலையில் பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக  படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை அடுத்து சென்னை திருவேற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

திட்டமிட்ட பட்ஜெட்டை தாண்டி சென்று கொண்டிருப்பதால் கடுப்பான சோனி நிறுவனம் இதுதான் கடைசி ப்ராஜெக்ட் என்று கமலிடம் சொல்லிவிட்டது. சோனியின் கூட்டணியில் 2000 கோடிக்கு அடுத்தடுத்து பல படங்களை  தயாரிக்க இருந்த கமலுக்கு அனைத்தும் மண்ணாகிப் போனது. உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட என்று மாறி மாறி புலம்பி வருகின்றனர்.

Also Read:கண்ணியமாக நடந்து கொள்ளும் கமல், சிம்பு.. சிவகார்த்திகேயன் போல் மாட்ட போகும் 5 ஹீரோக்கள்

Trending News