வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ரஜினியைப் போல் மாறிய கமல்.. விஸ்வரூபமெடுத்து இறங்கி அடிக்க திட்டம்

முன்பெல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட சில பெரிய இயக்குனர்களுக்கு மட்டும்தான் படம் நடித்துக் கொடுப்பார். ஆனால் இப்போது அப்படி கிடையாது பல இளம் இயக்குனர்களும் சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்கி அதில் வெற்றியும் பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதுதவிர பல இளம் இயக்குனர்களும் அவருக்காக கதையை தயார் செய்து காத்திருக்கின்றனர். தற்போது கமல்ஹாசனும் அவரைப் போலவே மாறியுள்ளார்.

தற்போது கமல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து பல இளம் இயக்குனர்களிடம் நல்ல கதையை தயார் செய்து கொண்டு வருமாறு அவர் கூறியிருக்கிறார். இதனால் முத்தையா உள்ளிட்ட பல இயக்குனர்களும் கதையை தயார் செய்துகொண்டு கமலின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில்தான் குவிந்துள்ளனர்.

மேலும் அவர்களிடம் கமல் எனக்கு ஒரு கமர்சியல் திரைப்படம் வேண்டும் படத்தில் ரசிகர்களை கவரும் வகையில் எல்லாம் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறாராம். இதனால் அதற்கு ஏற்றார்போல் கதையை தயார் செய்யும் மும்முரத்தில் பல இயக்குனர்கள் இருக்கின்றனர்.

இதுமட்டுமல்லாமல் கமல் தலைவன் இருக்கிறான் திரைப்படத்தையும் தற்போது மீண்டும் தொடங்கும் முடிவில் இருக்கிறார். கடந்த வருடத்தில் கமல்ஹாசன் இந்தத் திரைப்படத்தை நடித்து இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார். தமிழ் மற்றும் ஹிந்தி இருமொழிகளில் உருவாகும் இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகான் நடிப்பதாக தகவல் வெளியானது.

அதுமட்டுமல்லாமல் சில காட்சிகளில் கௌரவ தோற்றத்தில் நடிகர் சல்மான் கானும் இடம்பெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியது ஆனால் இடையில் என்ன நடந்ததோ இந்த படம் எடுக்கப்படாமல் கைவிடப்பட்டது. தற்போது இந்த படத்தைதான் கமல்ஹாசன் தூசிதட்டி எடுக்கும் முடிவில் இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News