திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விக்ரம் வெற்றியால் அரசியலை மறந்த உலக நாயகன்.. 3 பெரிய நடிகர்களுக்கு விரித்த வலை

கமல் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத அளவுக்கு வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து கமலின் மார்க்கெட்டும் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் அவர் கிட்டத்தட்ட தனக்கு ஒரு அரசியல் கட்சி இருக்கிறது என்பதையே மறந்து விட்டாராம்.

அந்த அளவுக்கு அவர் இப்போது அடுத்தடுத்த திரைப்படங்களை தயாரிப்பது, நடிப்பது என்று ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கிறாராம். அந்த வகையில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் கமல் அடுத்தடுத்து பல இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.

Also read:50 வயதை நெருங்கியும் ஹீரோயினாக நடிக்கும் 4 நடிகைகள்.. இன்றுவரை விடாத கமலஹாசன்

அதிலும் அவர் பக்கா வில்லேஜ் சப்ஜெக்ட், மல்டி ஸ்டார் போன்ற வெரைட்டியான கதைகளில் ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கிறாராம். அதனால் விரைவில் ஆண்டவரின் அடுத்தடுத்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் கமல் தயாரிப்பிலும் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்.

முன்னணி நடிகர்களை தன்னுடைய தயாரிப்பில் நடிக்க வைக்க விரும்பும் கமல் அதற்காக பல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அதில் முக்கியமாக சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூர்யா போன்ற நடிகர்களிடம் அவர் பேசி வருகிறார். ஏற்கனவே சிவகார்த்திகேயன் கமலின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

Also read:ஷங்கருக்கு தோள் கொடுத்து தூக்கி விடும் இயக்குனர்கள்.. வேகமெடுக்கும் இந்தியன் 2

அதேபோன்று விஜய் சேதுபதி மற்றும் சூர்யா இருவரும் விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தனர். அதனால் கமல் அவர்களுடன் இணைந்து நடிக்கும் வகையில் ஒரு மல்டி ஸ்டார் கதையை தேர்ந்தெடுத்து வைத்துள்ளாராம்.

தற்போது சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மூவரிடமும் இது குறித்து பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் இது குறித்த பரபரப்பான அறிவிப்பு வெளியாகும் என்று கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் மூவருமே கமல் மீது தீராத அன்பு கொண்டவர்கள். அதனால் இந்த முயற்சி நிச்சயம் உறுதி ஆகும் என்றும் கூறப்படுகிறது.

Also read:மருதநாயகத்திற்காக ஆக்ராவிலிருந்து வந்த பறவை.. ஆண்டவரால் மட்டும் தான் இதை செய்ய முடியும்

Trending News