திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

சாப்பாட்டில் ஸ்டிக்கர் ஒட்டி கமலை அவமானப்படுத்திய விசுவாசிகள்.. இப்பவும் மயில்சாமியை தேட இதுதான் காரணம்

Kamal got bad name by helping: மிக்ஜாம் புயலினால் சென்னையை சுற்றியுள்ள பல இடங்கள் இன்னும் பழைய நிலைமைக்கு திரும்பாமல் வெள்ள காடாய் தான் காட்சியளிக்கிறது. இதனால் சென்னை மாநகர மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அவர்களின் அன்றாட உணவு கிடைக்காமல் தவிக்கின்றனர்.

இதனால் திரை பிரபலங்கள் பலரும் உதவிக்கரம் நீட்டி உள்ளனர். ஆனால் கமல் உதவி செய்தும் அசிங்கப்பட்டு போயிருக்கிறார். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கமலின் மக்கள் நீதி மய்யம் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது. அந்த உணவு பொட்டலத்தின் மேலே கமலின் புகைப்படத்தின் ஸ்டிக்கரை ஒட்டி கொடுத்திருக்கிறார்கள்.

பசியை தீர்க்கக்கூடிய உணவில் கூட கமல் எதற்கு அரசியல் செய்கிறார் என்று இந்த உணவை வாங்கி பயனடைந்த மக்கள் முகம் சுளித்தனர். இதைவிட கேவலம் எதுவும் இல்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு இதைத்தான் ஜெயலலிதா செய்தார். அதைப் பற்றி கமல் கழுவி கழுவி ஊற்றினார்.

Also Read: சிவகார்த்திகேயனை நம்பி பிரயோஜனம் இல்லை.. அதிகமான பல கோடி பட்ஜெட், கழுவுற மீன்ல நழுவ பார்த்த கமல்

உதவி செஞ்சு அசிங்கப்பட்ட கமல்

ஆனால் இப்போது ஜெயலலிதா என்ன செய்தாரோ, அதை தான் கமல் செய்திருக்கிறார். கருத்து சொல்றதுக்கு கூட ஒரு தகுதி வேண்டும். பிறர் மீது குற்றம் சாட்டினால் அந்த குற்றத்தை செய்யாதவர்களால் தான் அதை சொல்ல முடியும். ஒருவேளை கட்சி விசுவாசிகள் தான் உணவு பொட்டலத்தில் கமலின் புகைப்படத்தை ஒட்டினார் என்றால், அதற்கு உலகநாயகன் எப்படி ஓகே சொன்னார் என்று தெரியவில்லை.

அரசியலுக்கு வந்து இன்னும் சரியான பொசிஷனுக்கு கூட வரல, அதுக்குள்ள கமல் இப்படி பண்றாரே! என சலிப்படைகின்றனர். ஒருவேளை மறைந்த காமெடி நடிகரான மயில்சாமி மட்டும் இப்போது சாலிகிராமத்தில் இருந்திருந்தால் அவர் களத்தில் இறங்கி மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்திருப்பார்.

அவர் இப்போது இல்லை. ஆனால் மக்களின் கண்கள் அவரை தான் தேடுகிறது. அவருக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் மக்கள் இப்போது தங்களது நிலைமையையும் வருத்தத்தையும் போஸ்டர் ஆக ஒட்டுகிறார்கள். அவர் செய்ததுதான் உதவி, இருந்தால் மயில்சாமி போல இருக்கணும். இந்த விஷயத்தில் கமல் ஒரு நல்ல நடிகர் என்று நிரூபித்துவிட்டார்.

சாப்பாட்டில் ஸ்டிக்கர் ஒட்டிய கமல்

kamal-cinemapettai

Also Read: மிக்ஜாம் புயல் பிக்பாஸிலும் எதிரொலி.. எலிமினேஷனை குறித்து ஆண்டவர் எடுத்த முக்கிய முடிவு

- Advertisement -

Trending News