Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தக்லைஃப்பை விடுங்க 2 பலாப்பழத்தை இங்க விற்கணுமே.. பிரச்சனையை தீர்க்க கமலுக்கு கிடைத்த டபுள் லட்டு

தக்லைஃப்பை விடுங்க 2 பலாப்பழத்தை இங்க விற்கணுமே.. பிரச்சனையை தீர்க்க கமலுக்கு கிடைத்த டபுள் லட்டு

தக்லைஃப் பட பிரச்சனை தான் இப்பொழுது பூதாகரமாக கர்நாடகாவில் வெடித்து வருகிறது. கமல் ஒன்று சொல்ல அவர்கள் ஒன்று நினைக்க என இந்த பிரச்சனை ஆரம்பத்தில் இருந்து தப்பான கோணத்தில் சென்று கொண்டிருக்கிறது. தக்லைஃப் பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் […]

தக்லைஃப் பட பிரச்சனை தான் இப்பொழுது பூதாகரமாக கர்நாடகாவில் வெடித்து வருகிறது. கமல் ஒன்று சொல்ல அவர்கள் ஒன்று நினைக்க என இந்த பிரச்சனை ஆரம்பத்தில் இருந்து தப்பான கோணத்தில் சென்று கொண்டிருக்கிறது. தக்லைஃப் பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கமல் பேசியதற்கு தான் இப்பொழுது கண்டனம் எழுந்து வருகிறது.

பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் தமிழ் மொழியிலிருந்து பிரிந்தது தான் கர்நாடகம் என கமல் பேசினார். ஆனால் அவர் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரை பற்றி பேசும்பொழுது நாங்கள் சகோதரர்கள், உறவுக்காரர்கள் தமிழ் மொழியும், கர்நாடகாவும் ஒன்றுதான் என்று அவரை புகழ்ந்து பேசும்போது இப்படி வார்த்தை வெளியே வந்தது.

இதைப் பிடித்துக் கொண்ட அவர்கள் கர்நாடக மொழியை பழித்துவிட்டார் என போர்கொடி தூக்கி வருகிறார்கள். தக்லைஃப் படத்தை இங்கே ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என பிரச்சனையை கிளப்பி வருகிறார்கள். கமலின் பட போஸ்டர்களையும் எரித்து வருகிறார்கள்.

இப்படி பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. அவர்களும் பான் இந்தியா படங்கள் எடுத்து வருகிறார்கள். பெரிய பட்ஜெட் படங்களாகிய கேஜிஎப் 3 மற்றும் காந்தாரா 2, என இரண்டு பெரிய படங்கள் தயாராகி வருகிறது. இந்த படங்களை தமிழ்நாட்டில் கிடைக்கும் கலெக்ஷனை வைத்தும் பட்ஜெட் கணக்கு போட்டுள்ளனர்

இப்படி அவர்கள் பிரச்சனை செய்தால் அவர்கள் படத்திற்கும் இங்கே எதிர்ப்பு வரும் என மூத்த சினிமா வல்லுனர்கள் கூறி வருகிறார்கள். இந்த இரண்டு பெரிய பட்ஜெட் படங்களையும் கொம்பாலையா ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இதனால் கமல் பிரச்சனையை தீர்வு கிடைப்பது உறுதி.

T

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.