Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

விக்ரமிற்கு பின் வரிசை கட்டி நிற்கும் இயக்குனர்கள்.. 67 வயதில் கமல் செய்யப் போகும் சாதனை

விக்ரமிற்கு பின் வரிசை கட்டி நிற்கும் இயக்குனர்கள்.. 67 வயதில் கமல் செய்யப் போகும் சாதனை

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விக்ரம். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் நடித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் நடிகர் சூர்யாவும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். விக்ரம் படம் […]

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விக்ரம். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் நடித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் நடிகர் சூர்யாவும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

விக்ரம் படம் வருகிற ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய பா ரஞ்சித் கமலுடன் அடுத்த படத்தில் இணைய உள்ளதாகவும், இப்படம் மதுரை சாயலில் விருமாண்டி படம் போல உருவாக உள்ளதாக கூறினார்.

இதை தொடர்ந்து கமல் மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் ஒரு படத்தில் நடிக்கயுள்ளார் என்ற தகவலையும் கமல் கூறினார். மேலும் இயக்குனர் ரத்ன குமாரிடம் கதையைப் பற்றி பேசியுள்ளோம் விரைவில் அது உறுதி செய்யப்படும் என்ற செய்தியையும் அந்த மேடையில் கமல் கூறியுள்ளார்.

இந்தநிலையில் பா ரஞ்சித், லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் ஆகிய படங்களில் அடுத்தடுத்து கமல்ஹாசன் நடிக்கயுள்ளார். மேலும் இயக்குனர் வெற்றிமாறனுடன் கமல் ஒரு படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மலையாள இயக்குனர் மகேஷ் இயக்கத்தில் உருவாக உள்ள தேவர் மகன் 2 படத்திற்கு கமலஹாசன் தயாராகி வருகிறார்.

அதாவது விஸ்வரூபம்-2 படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக கமலின் திரைப்படம் எதுவும் வெளியாகாத இருந்தது. கமலஹாசன் அரசியல் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் படப்பிடிப்பில் அவரால் கவனம் செலுத்த முடியாமல் போனது.

இந்நிலையில் தற்போது சினிமாவில் கமலஹாசன் முழுவீச்சில் இறங்கி பல படங்களை தயாரிப்பது மற்றும் 4 முதல் 5 படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கமலின் படங்கள் வரிசையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.