Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

இதுவரைக்கும் யார்கிட்டயும் கையேந்தாத கமல்ஹாசன்.. கை கொடுக்கப் போகும் விஜய்

தற்போது தமிழ் சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகள் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் வைத்து படங்களை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும் வெளியில் இருந்துதான் ஃபைனான்ஸ் வாங்கி படங்களை தயாரித்து வருகின்றனர். ஆனால் உலகநாயகன் கமலஹாசன் […]

தற்போது தமிழ் சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகள் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் வைத்து படங்களை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும் வெளியில் இருந்துதான் ஃபைனான்ஸ் வாங்கி படங்களை தயாரித்து வருகின்றனர்.

ஆனால் உலகநாயகன் கமலஹாசன் தான் தயாரிக்கும் படங்களை தன்னுடைய சொந்த பணத்தில் தான் எடுத்து வருகிறார். தற்போது திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் விக்ரம் படத்தை கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரித்தியிருந்தார்.

இந்நிலையில் முதல்முறையாக விக்ரம் படத்திற்காக மதுரை அன்பு இடம் கமல் கடன் வாங்கினார். விக்ரம் படம் வெளியான பிறகு கமலஹாசன் கடன் அடைப்பதை விட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு கோடி மதிப்பிலான காரை பரிசாக வழங்கினார். இப்படத்தில் பணியாற்றிய 13 இயக்குனர்களுக்கு பைக்கை பரிசாக வழங்கினார்.

அப்போது அந்த உதவி இயக்குனர்களுக்கு பரிசு வழங்கும் போது மதுரை அன்பு அருகில் இருந்தார். அப்போதுதான் கமலஹாசன் கடன் வாங்கியது தெரிந்தது. இது வரைக்கும் கமலஹாசன் சிறுவயதிலிருந்து சினிமாவில் பிறந்தாலும் எந்த ஒரு இடத்திலும் அவர் கடன் வாங்கியது கிடையாது.

தங்கள் சொந்த பணத்தை மட்டுமே வைத்து படம் எடுத்து வந்தார். மேலும், இது வரைக்கும் கமலஹாசனின் படங்களுக்கு கடன் வாங்கியது அவருடனான சந்திரஹாசன் தான். இந்நிலையில் தற்போது கமலஹாசன் தனது சொந்த தயாரிப்பின் மூலம் முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிக்க உள்ளார்.

முதலில் விஜய்யிடம் கமல் இதை பற்றி பேசியுள்ளார். ஆனால் லோகேஷ் இயக்கும் தளபதி 67 படத்தை வேறு ஒரு தயாரிப்பாளர் தயாரிக்கயுள்ளார். இதனால் தளபதி 68 படத்தை கமலஹாசன் தயாரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதை தொடர்ந்து சூர்யாவின் படத்தையும் கமலஹாசன் தயாரிக்கயுள்ளார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.