Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

ஹாலிவுட் ஜாம்பவான்களை விட கமல், மம்மூட்டி, சிரஞ்சீவி சிறந்தவர்கள்:சந்தீப் ரெட்டி வங்கா புகழாரம்!

ஹாலிவுட் ஜாம்பவான்களை விட கமல், மம்மூட்டி, சிரஞ்சீவி சிறந்தவர்கள்:சந்தீப் ரெட்டி வங்கா புகழாரம்!

இந்தியத் திரையுலகில் பல மொழிகளைச் சேர்ந்த நடிகர்கள் தங்களுடைய தனித்துவமான நடிப்புத் திறமையால் உலகளவில் கவனம் பெற்று வருகின்றனர். குறிப்பாக, தமிழ், மலையாளம், தெலுங்கு திரையுலகில் நீண்டகாலமாகப் பயணித்து வரும் முன்னணி நடிகர்களின் நடிப்புத் திறமை குறித்து அவ்வப்போது சர்வதேச அளவில் விவாதங்கள் எழுகின்றன. அந்த வகையில், பிரபல இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ள கருத்து தற்போது சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஹாலிவுட் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர்களான ராபர்ட் டி நீரோ மற்றும் அல் பசினோ ஆகியோரின் படங்களுடன் ஒப்பிடும்போது, இந்திய நடிகர்களான கமல்ஹாசன், மம்மூட்டி, சிரஞ்சீவி ஆகியோரின் படங்களும் அவர்கள் ஏற்று நடித்த கேரக்டர்களும் மிகப்பெரியவை என்று சந்தீப் ரெட்டி வங்கா குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்காகத் தங்களுடைய கெட்டப் , பாடி லாங்குவேஜ், நடிப்பு எனப் பல விஷயங்களில் மாற்றங்களைச் செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் திறன் இந்த நடிகர்களிடம் இருப்பதை அவரது கருத்து சுட்டிக்காட்டுகிறது.

நடிகர் கமல்ஹாசன் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட கேரக்ட்ர்களில் நடித்து இந்திய சினிமாவில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கியுள்ளார்.அதேபோல், மம்மூட்டி தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பிலும்,சிரஞ்சீவி தனது சினிமாப்பயணத்திலும் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுள்ளனர்.

ஹாலிவுட் நடிகர்களுடன் இந்திய நடிகர்களை ஒப்பிட்டு சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ள இந்தக் கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.குறிப்பாக, மூன்று மொழிகளின் முன்னணி நட்சத்திரங்களையும் ஒரே பாராட்டில் குறிப்பிட்டிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.