வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சிறுத்தை போல வேட்டையாட காத்திருக்கும் கமல்.. மலையாள நடிகர் உட்பட 5 பேருக்கு வலை வீசும் உலகநாயகன்

உலக நாயகன் கமலஹாசன் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இந்நிலையில் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் புதிய படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயனின் 21 வது படத்தை இந்நிறுவனம் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் சிறுத்தை போல வசூல் வேட்டையாட 5 நடிகர்களுக்கு கமல் வலை வீசி உள்ளார்.

சிம்பு : மாநாடு படத்திலிருந்து சிம்புவின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களும் நல்ல வசூலை பெற்றது. இந்நிலையில் சிம்புவின் படத்தை தயாரிக்க கமல் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் சிம்புவும் கண்டிப்பாக ராஜ்கமல் நிறுவனத்திற்கு படம் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளாராம்.

Also Read : ஓடுற குதிரைகளை வளைத்து போடும் கமலஹாசன்.. வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரைகள்

சூர்யா : சூர்யா தற்சமயம் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ரிலீஸுக்கு பிறகு அவரது மார்க்கெட் வேற லெவல் இருக்கும் என பேசப்படுகிறது. இதனால் சூர்யாவை தனது நிறுவனத்தில் நடிக்குமாறு கமல் கேட்டுக் கொண்டுள்ளார். ஆகையால் வாடிவாசலுக்கு பிறகு இந்த கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறது.

தனுஷ் : தனுஷின் நடிப்பில் சமீப காலமாக வெளியான படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தை பெரிதும் நம்பியுள்ளார். இதை தொடர்ந்து இயக்கம், தயாரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ள தனுஷ், கமல் தயாரிப்பிலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம். தனுஷ் மாரி செல்வராஜ் உடனும் ஒரு படத்தில் கூட்டணி போட இருக்கிறார்.

Also Read : லோகேஷ் ரீமேக் செய்ய ஆசைப்படும் 5 படங்கள்.. 3 கமல் படங்களை குறி வைத்து போடும் திட்டம்

விஜய் : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது லியோ படம் உருவாகி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் கமல் தாமாகவே முன்வந்து விஜய்யை தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு படம் பண்ண கேட்டுக் கொண்டுள்ளாராம்.

பகத் பாசில் : மலையாள நடிகர் பகத் பாசிலுக்கு அங்கு எவ்வளவு ரசிகர்கள் உள்ளனரோ அதே அளவு தமிழ் சினிமாவிலும் தற்போது உள்ளனர். ஏனென்றால் இப்போது தமிழில் வெளியாகும் படங்களில் பகத் பாசில் முக்கிய வில்லனாக நடித்து வருகிறார். அவரை ஹீரோவாக வைத்து தமிழில் ஒரு படம் தயாரிக்க கமல் மும்முரம் காட்டி வருகிறார்.

Also Read : தீபிகா படுகோனாவால் வாயடைத்துப் போன கமல்.. இருக்கிறதை விட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கெதி

Trending News