Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஷங்கரை நம்பி கோட்டைவிட்ட கமல்.. விட்டதை பிடிக்குமா இந்தியன் 3

ஷங்கரை நம்பி கோட்டைவிட்ட கமல்.. விட்டதை பிடிக்குமா இந்தியன் 3

Kamal : ஷங்கர், கமல் என்ற பிரம்மாண்ட கூட்டணியில் வெளியான இந்தியன் 2 படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது‌. இதை அடுத்து லைக்கா நிறுவனத்திற்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை தான் கொடுத்திருந்தது. இந்த சூழலில் கமலின் […]

Kamal : ஷங்கர், கமல் என்ற பிரம்மாண்ட கூட்டணியில் வெளியான இந்தியன் 2 படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது‌. இதை அடுத்து லைக்கா நிறுவனத்திற்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை தான் கொடுத்திருந்தது.

இந்த சூழலில் கமலின் தயாரிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ஆனால் அவர் நடிப்பில் வெளியான இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் படங்கள் அடுத்தடுத்து தோல்வியை கொடுத்தது.

இதற்கு காரணம் அமரன் படத்தை முழுவதுமாகவே கமல் பார்த்துவிட்டு சில மாற்றங்கள் செய்திருக்கிறார். ஆனால் மணிரத்னம் மற்றும் ஷங்கர் போன்ற பிரம்மாண்ட இயக்குனர்களை நம்பி கமல் இறங்கினார். அதோடு அவர்கள் சினிமாவில் இத்தனை வருடங்கள் பயணித்ததால் மாற்றங்களும் இவரால் சொல்ல முடியாது.

இந்தியன் 3-க்கு தயாராகும் கமல்

இந்தியன் 2 என்ற ஒரே பாகமாக வெளியாகும் என்று தான் கமல் நினைத்தாராம். கடைசியில் அதிக காட்சிகள் எடுத்ததால் வெட்டப்பட்ட காட்சிகளையும் மீண்டும் வைத்து இரண்டு பாகங்களாக ஷங்கர் கொடுத்துவிட்டார்.

படத்தின் தோல்விக்கு இதுவும் ‌முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால் இந்தியன் 3 படத்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர். இன்னும் 30 நாளுக்கு படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று ஷங்கர் கூறியிருக்கிறாராம். லைக்காவும் சரி என்று கூறி இருக்கிறார்கள்.

கமலின் கால்ஷுட்டுக்காக இப்போது படக்குழு காத்திருக்கிறது. இந்தியன் 2வில் கமல் கோட்டை விட்ட நிலையில் இந்தியன் 3 மூலம் அதை ஈடு கொடுப்பார் என எதிர்பார்க்கலாம். மேலும் அடுத்ததாக கமல் அருண்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.