வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கமலுக்கு டேக்கா கொடுத்த ஹாட்ஸ்டார்.. தலையில் துண்டை போட்ட ஆண்டவர்

Kamal Haasan: உலக நாயகன் கமலஹாசனுக்கு விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதனால் அடுத்தடுத்து அவருடைய சொந்த தயாரிப்பில் நிறைய படங்களை எடுக்க களம் இறங்கினார். சிம்பு, சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் என இளம் ஹீரோக்களை வளர்த்து விடுவதற்காக தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை பயன்படுத்தினார்.

ஒரு படம் முழுசாக முடிந்த பிறகு இன்னொரு படத்தை ரெடி பண்ணி இருக்கலாம் கமலஹாசன். ஆனால் எஸ் டி ஆர் 48, எஸ் கே 21 என அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டார். அதோடு சேர்த்து விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தையும் ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் தான் தயாரிப்பதாக இருந்தது.

கமல் இவ்வளவு தைரியமாக அடுத்தடுத்து படங்களை தயாரிக்க முடிவெடுத்ததற்கு காரணம் ஹாட்ஸ்டார் தான். சோனி மற்றும் ஹாட்ஸ்டார் நிறுவனங்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பட தயாரிப்பில் பணி புரிவதாக ஒத்துக்கொண்டது தான் இதற்கு காரணம். ஆனால் தற்போது ஹாட்ஸ்டார் இடமிருந்து கமலுக்கு எந்த பணமும் கிடைக்கவில்லை.

Also Read:5 தமிழ் ஹீரோக்களை நேரடியாக ஹிந்தி படங்களில் நடிக்க வைக்கும் அட்லி.. கமலுக்கு போட்ட ஸ்கெட்ச்

அடுத்தடுத்த படங்களின் அறிவிப்பை வெளியிட்ட கமல், இப்போது என்ன செய்வது என தெரியாமல் புலம்பி கொண்டிருக்கிறாராம். சிம்பு மற்றும் தேசிங்கு பெரியசாமி கூட்டணியில் உருவாக இருந்த பிரம்மாண்ட படத்திற்கு 100 கோடி பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், தற்போது எழுவது கோடி தான் ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக தயாரிப்பு நிறுவன குழு சொல்லிவிட்டதாம்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தத் தொகை அதிகமாகிவிட்டது. இதற்கு, சிவகார்த்திகேயன் கால்ஷீட் இழுத்தடித்ததும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இதனால் கமல் என்ன செய்வது என தெரியாமல் மாட்டிக் கொண்டு முழித்துக் கொண்டிருக்கிறார்.

எல்லாம் கை மீறி போய்விட்டதால் கமல், விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தை கைவிட்டுவிட்டார். இந்த படம் தற்போது லலித் கைவசம் போய்விட்டது. பெத்த லாபம் எதிர்பார்த்து ஹாட்ஸ்டார் இடம் கமல் மாட்டிக் கொண்டு தேவையில்லாத பிரச்சனை இழுத்து இருக்கிறார்.

Also Read:வாய்ப்பு கொடுத்தவருக்கே டிமிக்கி கொடுக்கும் விக்கி.. உன் சங்காத்தமே வேண்டான்னு கும்பிடு போட்ட ஆண்டவர்

Trending News