திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

களத்தில் இறங்கும் உலகநாயகன்.. விஜய்யுடன் போட்டி போடும் சிவகார்த்திகேயன்

கோலிவுட்டில் முக்கிய நட்சத்திரமாக இருக்கும் கமல் விஜய் இருவரும் தற்போது நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றனர். அதாவது அக்டோபர் 24 ஆம் தேதி உலகெங்கும் தீபாவளி பண்டிகையை பண்டிகையை முன்னிட்டு அன்றைய தினத்தில் சின்னத்திரையில் முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் படங்கள் திரையிடப்பட்டு தங்களது டிஆர்பி ரேட்டிங்கை எகிர விடுவது மட்டுமல்லாமல் ரசிகர்களையும் குதூகலப் படுத்துவார்கள்.

அப்படி இந்த வருடம் தீபாவளி சூப்பர் ஹிட் அடித்த 5 படங்கள் சின்ன திரையில் ஒளிபரப்பாகிறது. இதில் நான்கு வருடங்களுக்கு பிறகு உலகநாயகன் நடித்திருந்த விக்ரம் படம் திரையரங்கில் தாறுமாறாக ஓடியது. இதில் உலக நாயகனுடன், விஜய் சேதுபதி சூர்யா பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

Also Read: டிஆர்பி-யில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள்.. அதிரடி திருப்பத்தை ஏற்படுத்திய விஜய் டிவியின் சங்கமம்

ஆகையால் விக்ரம் படம் எப்போது சின்னத்திரையில் போடுவார்கள் என காத்திருந்த ரசிகர்களுக்கு தீபாவளி அதிரடி சரவெடியாக விஜய் டிவி விக்ரம் படத்தை ஒளிபரப்பு செய்யப் போகிறது. அதேசமயம் சன் டிவியும் தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தை ஒளிபரப்புகிறது.

இந்த படம் ரிலீஸ் ஆகி சில மாதங்களே ஆனதால் பீஸ்ட் படத்தையும் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஆகையால் தீபாவளிக்கு ஒளிபரப்பாகும் இந்த இரண்டு படங்களிலும் தான் டிஆர்பி-யில் அதிக போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: தீபாவளிக்கு ஒளிபரப்பாகும் 5 படங்கள்.. சூப்பர் ஸ்டார் படம் இல்லாத ஒரே வருத்தம் தான்

இதுமட்டுமின்றி ஜீ தமிழில் ஆர்யா நடிப்பில் கடந்த மாதம் ரிலீசான கேப்டன் படமும், அதைத்தொடர்ந்து கலைஞர் டிவியில் இந்த வருடம் மே மாதம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தை ஒளிபரப்பாகிறது. இந்த படம் பாக்ஸ் ஆபிசில் 100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

இப்படி முன்னணி தொலைக்காட்சிகளில் சின்னத்திரை ரசிகர்களை கவரும் விதத்தில் சூப்பர் ஹிட்டடித்த படங்களைத் தேர்வு செய்து ஒளிப்பரப்புவதால் இதில் எதைப் பார்ப்பது என சின்னத்திரை ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். மேலும் நான்கு வருடங்களுக்கு பிறகு ரேஸ்க்கு வந்த கமலுடன் விஜய், சிவகார்த்திகேயன் நேருக்கு நேர் மோதுகிறது.

Also Read: கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த 5 படங்கள்.. அதிலும் 1356 எபிசோடு கடந்த கோபியின் நாதஸ்வரம் சீரியல்

Trending News