திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிம்புக்காக ரிஸ்க் எடுக்கும் கமல்.. பாலிவுட்டிலிருந்து இறக்குமதியாகும் ஹீரோயின்

சிம்பு இப்போது முன்பு போல் இல்லை ரொம்பவும் மாறிவிட்டார். சில வருடங்களுக்கு முன்பு இவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருந்தது. ஆனால் இப்போது அவர் தன்னுடைய வேலையில் காட்டும் டெடிகேஷன் பலரையும் வியக்க வைத்திருக்கிறது. அதனாலேயே இவரை தேடி பிரம்மாண்டமான வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது இவர் கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். வரலாற்று கதையை மையப்படுத்தி உருவாகும் இப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் எடுக்கப்பட இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சிம்புவுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என படக்குழு தீவிர ஹீரோயின் வேட்டையிலும் இறங்கி இருக்கிறது.

Also read: சிம்புவின் தாதா லுக்கை பார்த்து மிரண்ட இயக்குனர்.. இணைய போகும் வெற்றி கூட்டணி

அதில் பல ஹீரோயின்களின் பெயர் பரிசீலனையில் இருந்த நிலையில் தற்போது பாலிவுட் டாப் நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். அதாவது வரும் ஜூன் மாத தொடக்கத்தில் இப்படம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. அதற்கு முன்பாகவே மற்ற நட்சத்திரங்களின் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது தீபிகா படுகோனிடம் பட குழு பேசி வருகின்றனர். ஹிந்தி திரை உலகில் முன்னணி அந்தஸ்தில் இருக்கும் இவர் சமீபத்தில் ஷாருக்கானுடன் பதான் திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகப்பெரும் வசூல் வேட்டை நடத்திய அந்த படத்தில் இருந்து தீபிகாவின் சம்பளமும் எக்கச்சக்கமாக உயர்ந்து விட்டதாம்.

Also read: சக நடிகர்களை தூக்கி விட்ட 6 ஹீரோக்கள்.. வளர்த்து விட்ட வரை மாரில் முட்டிய சிவகார்த்திகேயன்

இருப்பினும் கமல் அவரை சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க அதிக ரிஸ்க் எடுத்து இருக்கிறார். எப்படி என்றால் சிம்புவுக்கு இப்படத்திற்காக 25 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. அதே சம்பளத்தை தீபிகாவுக்கும் கொடுக்க அவர் சம்மதித்திருக்கிறாராம்.

இதை வைத்து பார்க்கும் பொழுது தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஹீரோ, ஹீரோயின் இருவருக்கும் ஒரே மாதிரியான சம்பளம் பேசப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். இது பெரும் ஆச்சரியத்தை கிளப்பிய நிலையில் அடுத்தடுத்த இன்ப அதிர்ச்சியை கொடுக்கவும் பட குழு தயாராகி வருகிறதாம். இதன் மூலம் கமல் பல ப்ளான்களை போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: ஏவிஎம் மியூசியத்தில் கெத்தாக நிற்கும் ரஜினி சிலை.. வருகை தந்து சிறப்பித்த கமல்

Trending News